சென்னை: பீப் பாடல் புகழ் சிம்புவும் அனிருத்தும் சமீபத்தில் தான் சர்ச்சையில் இருந்து மீண்டு, தங்கள் மறைவிடங்களில் இருந்து வெளியே வந்துள்ளனர். இந்நிலையில், திங்கள் கிழமை நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சிம்புவும் அனிருத்தும் வாக்களிக்க பொத்தானை அமுக்கியபோது பொது ‘பீப்’ என்ற சத்தம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த விஷயம் ரகசியமாக உடனடியாக இன்டர்நெட்டில் லீக் ஆனதைத் தொடர்ந்து பெண்ணைக் காப்போம், எங்கள் மண்ணைக் காப்போம் என்று கோஷமிட்டவாறு மாதர் சங்கத்தினர் பயங்கர ஆயுதங்களுடன் வாக்கு சாவடிக்குள் புகுந்து இருவரையும் பலமாக தாக்கத் துவங்கினர். ஒன்றும் புரியாமல் விழித்த அனிருத்தும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்து, ஷேர் ஆட்டோவில் ஏறி தப்பினர் என செய்திகள் கூறுகின்றன.voting machine

தகவல் அறிந்த காவல் துறை உயர் அதிகாரிகள் ஆயுதங்களை கைப்பற்றி விசாரித்ததில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து வந்த ‘பீப்’ சத்தமே இந்த சர்ச்சைக்கு காரணம் என்று கண்டறிந்தனர். எனவே இனிமேல் தமிழ் நாட்டின் மானத்தையும், கலாச்ச்சரத்தியும் காப்பற்ற பொத்தானை அமுக்கும் பொது ‘பீப்’ சத்தம் வராத வாக்குப்பதிவு இயந்திரங்களை உபயோகிக்குமாறு தேர்தல் கமிஷனை அறிவுறுத்தியுள்ளனர்.

There are no comments yet