நீதிபதி குமாரசாமியை வைத்து வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் கமிஷனுக்கு ஜெயா கோரிக்கை

343

சென்னை: கடந்த திங்கள்கிழமையன்று வாக்குப்பதிவு நடந்துள்ள தமிழகத்தின் 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. வாக்கு எண்ணிக்கையின் போது, முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு அதை கணினியில் பதிவு செய்வதை கண்காணிப்பதற்கு, நுண் பார்வையாளர்கள் மேற்பார்வையாளாராகச் செயல்படுவர். வாக்கு எண்ணும் பணியில், 9,621 பேர் பணியில் ஈடுபடுகின்றனர். 3,971 நுண் பார்வையாளர்களும் வாக்கு எண்ணிக்கையைக் கவனிப்பர். மொத்தமாக, 13,592 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி குமாரசாமியை வைத்து நடத்த வேண்டும், தேர்தல் முடிவுகளை  நீதிபதி குமாரசாமியே அறிவிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்ததாக நம்பத்தகாத வட்டாரங்களில் இருந்து செய்திகள் தெரிவிக்கின்றன. நீதிபதி குமாரசாமி 19 ஆண்டுகளாக நடைபெற்ற ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை 41 நாட்களில் விசாரித்து, ஜெயலலிதாவை விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

There are no comments yet