தே.மு.தி.க., ம.ந.கூ வாக்குகளை எப்போது எண்ணப் போறீங்க – தேர்தல் கமிஷனர் ராஜேஷ் லக்கானி மேல் கேப்டன் காட்டம்

590

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து கடந்த ஆண்டு ஜுலையில் மக்கள் நலக் கூட்டியக்கத்தை உருவாக்கினர். இந்தக் கூட்டியக்கம், மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தேர்தல் கூட்டணியாக மாறியது. அதன்பிறகு இந்தக் கூட்டணியில் தேமுதிக, தமாகா கட்சிகள் இணைந்தன. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 3-வது அணியாக உருவானது.

இந்நிலையில் நேற்று வெளியான தேர்தல் முடிவுகள் முதல்வர் ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துமாறு அமைந்தன. இது குறித்து தி.மு.தி.க. தலைவரும், கே.ந.கூ வின் முதல்வர் வேட்பாளருமான கேப்டன் விஜயகா-tamilnadu-election-resultந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள்உணர்த்தும். தே.மு.தி.க., ம.ந.கூ வாக்குகள் இன்னும் எண்ணப்படவில்லை. ராஜேஷ் லக்கானிக்கு, எங்கள் கட்சி வாக்குகளை உடனே எண்ணி முடிவுகளை அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன், வைகோவும் நானும் அமைத்த கூட்டணியில் ஒன்றுமே உருப்படாது என்பது அனைவரும் அறிந்ததுதான் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

There are no comments yet