சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் நோட்டாவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக கேப்டன் விஜயகாந்த் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நேற்று தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவியதால் வாக்குகள் சிதறியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுள்ள வாக்கு சதவீத நானும், பிரேமலதாவும் அலசி, ஆராய்ந்து பார்த்தோம்.

தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள புள்ளி விபர கணக்கின்படி சென்னையில் 50 ல் ஒரு வாக்காளர் நோட்டா என்ற கட்சிக்கு ஓட்டளித்துள்ளார், இதன்படி தேர்தலில் நோட்டாவுக்கு 5.58 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. சென்னைவாசிகளே நோட்டாவுக்கு அதிக ஓட்டுக்களை பதிவு செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள புள்ளிவிபர கணக்கில் தெரிய வந்துள்ளது. தமிழக அளவிலும் நோட்டாவுக்கு வாக்குகள் அதிகரித்துள்ளதையும் இந்தத் தேர்தலில் காண முடிந்தது. இந்தத் தேர்தலி்ல மொத்தமாக தமிழகத்தில் 5.61 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன. நோட்டாவிற்கு வாக்களித்தவர்கள் கண்டிப்பாக படிப்பறிவும் உலகறிவும் மிக்கவர்களாகத்தான் இருப்பார்கள். எனவே நோட்டா கட்சியை எனக்கும் பிரேமலதாவிற்கும் பிடித்துள்ளது.premalatha_Vijayakanth

இப்போதைய எங்களது கூட்டணிக் கட்சிகளைவிட நோட்டா அதிக வாக்கு சதவீதம் வைத்துள்ளது. நோட்டாவுக்கு 1.3% சதவீதம் வாக்கு உள்ளது, அனால் எங்களது கூட்டணிக் கட்சிகள் மதிமுக 0.9%, விசிக 0.8%, சிபிஐ 0.8%, சிபிஎம் 0.7% என நேட்டாவை விட குறைந்த வாக்குகள் வாங்கி இந்த தேர்தலில் என் தலை மீது மண்ணை அள்ளிப் போட்டுள்ளன. இனி மேல் வைகோ பேச்சை கேட்கமாட்டேன். எனவே பிரேமலதா கொடுத்த ஆலோசனையின் படி ” என் கூட்டணிக் கட்சிகளை விட அதிக வாகுகள் பெற்ற நோட்டா கட்சியுடன் அடுத்த தேர்தலில் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளேன். விரைவில் நோட்டா கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து எதிர்கால கூட்டணி பற்றி பேசப் போகிறேன் இவ்வாறு கேப்டன் கூறினார்.

பகிர்

There are no comments yet