சென்னை: நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழகத்தில் இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தி.மு.க. 89 எம்எல்ஏக்களுடன் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக பேரவையில் நுழைய உள்ளது. திமுகவின் சட்டசபை தலைவராக, தி.மு.க., தலைவர் கருணாநிதியும், துணை தலைவராக பொருளாளர் ஸ்டாலினும், கொறடாவாக, முன்னாள் அமைச்சர் துரைமுருகனும், தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ., க்கள், நேற்று சென்னை வந்தனர்; கோபாலபுரம் வீட்டில், கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, மூத்த எம்.எல்.ஏ.,க்கள் சிலர், ‘எதிர்க்கட்சி தலைவராக, நீங்கள் செயல்பட வேண்டும்’ என, கருணாநிதியிடம் வலியுறுத்தினர்.
ஆனால் திமுகவை பொருத்தவரை ஆளும்கட்சியாக இருக்கும்போது திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக தேர்வு செய்யப்படுவார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேராசிரியர் க.அன்பழகனை தேர்வு செய்ய ஆதரவுக் கரம் நீட்டுவார். ஆனால், 2011-ஆம் ஆண்டில் சட்டப் பேரவைக் குழுத் தலைவராக ஸ்டாலினுக்கு இருவரும் ஆதரவு தெரிவித்து, வழிவிட்டனர். இதே நிலையையே இந்த முறையும் கருணாநிதி மேற்கொள்வார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதன்படி, ஸ்டாலினே எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பார் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன
இந்நிலையில், சட்டசபைக்கு சென்றால் எதையாவது சொல்லி வெளிநடப்பு செய்வதுதான் நமது குடும்ப, கட்சி வழக்கம், இதை மாற்ற முடியாது. இதனால் ஏற்படும் நேர விரயத்தை தவிர்க்க சட்டசபைக்கு போகாமலேயே வெளிநடப்பு செய்ய ஏதாவது வழி இருக்கிறதா என தனது கட்சியின் மூத்த வழக்கறிஞர் மற்றும் கட்சித் தலைவர்களுடன் கருணாநிதியும், ஸ்டாலினும் ஆலோசனை செய்ததாக கோபாலபுர செய்திகள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks