சென்னை: வரும் ஜூன் 11 ம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மாநிலங்களவைக்கான ஆறு இடங்கள் காலியாகவுள்ளன. கே.பி.ராமலிங்கம் (திமுக), ஏ.நவநீதகிருஷ்ணன் (அதிமுக), எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), பால் மனோஜ் பாண்டியன் (அதிமுக), வில்லியம் ரபி பெர்னார்ட் (அதிமுக) ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைகிறது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில் இதற்கான தி.மு.க., வேட்பாளராக டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி போட்டியிடுவர் என அக்கட்சி தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த பதவிக்கு, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக சட்டசபை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கு, 34 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை. அந்த வகையில்vaiko jaya 134 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள அதிமுகவுக்கு 3 ராஜ்யசபா எம்பிக்கள் பதவி நிச்சயம் கிடைக்கும். 98 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள திமுகவுக்கு 2 பதவிகள் நிச்சயம். ஒருவேளை, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக ஜெயித்தால் 4 உறுப்பினர்களை அக்கட்சியால் தேர்ந்தெடுக்க முடியும்.

இந்நிலையில், ம.ந.கூ மற்றும் கே.ந.கூ அமைத்து, வாக்குகளைப் பிரித்து தனது வெற்றிக்கு மறைமுகமாக உதவிய வைகோவிற்கு ஏதாவது கைமாறு செய்யாய, முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகவும், உபரியாகக் கிடைக்கும் நாலாவது இடத்தை வைகோவிற்கு வழங்க இருப்பதாகவும் நம்பத் தகாத இடங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet