பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு கமர்கட்டும், லாலி பாப்பும் தரவில்லையே: திருந்தாத ஜெயலலிதா – கருணாநிதி பாய்ச்சல்

404

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் அவமதிக்கப்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று நடைபெற்றது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இது குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை; முதல்வர் பதவியேற்பு விழாவில், தேர்தலில் 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் ஸ்டாலினுக்கு விழாவில் கமர்கட் மற்றும் லாலி பாப் வழங்கப்படவில்லை. ஆனால் அதே தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு கமர்கட் மற்றும் லாலி பாப் வழங்கியது மட்டுமல்லாமல் ஐஸ் கிரீம், கடலை மிட்டாயும் வழங்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே தி.மு.க.,வை திட்டமிட்டு அவமானப்படுத்தினார் ஜெயலலிதா. இதைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது. எனக்கும், எனது குடும்பத்திற்கும் இன்னமும் ஓட்டுப் போட்டு, எங்களை நம்பிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

There are no comments yet