​ஜெயாவின் உத்திரவினையும் மீறி ஸ்டாலினை கடைசி பந்தியில் உட்கார வைத்த அதிகாரிகள்

564

சென்னை: ஜெயலலிதாவின் பதவியேற்பில் ஸ்டாலினுக்கு தகுந்த மரியாதை தரவில்லை என கருணாநிதி அறிக்கை வெளியிட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஸ்டாலினுக்கு முதல்வரிசையில் இடம் அளிக்க அதிகாரிகளை வலியுறுத்தினேன். வரையறையை மீறியும் நான் முன்வரிசையில் ஸ்டாலினுக்கு இடம் அளிக்க கூறினேன். ஆனால் அதிகாரிகள் ஒதுக்கவில்லை. ஸ்டாலினையும் அவர் சார்ந்திருக்கும் கட்சியையும் அவமதிக்கும் நோக்கம் இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியி்ட்டுள்ளார்.

ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு முதல்வர் ஒரு விஷயத்தை வலியுறுத்திய பின்பும், அதிகாரிகள் அதை செய்ய மறுத்து இருப்பார்களா. அதிலும், எதிர்க்கட்சி தலைவர் ஒருவருக்கு இடம் ஒதுக்க முதல்வர் பதவி ஏற்க இருக்கும் ஒருவர் கூறியும் அதிகாரிகள் மறந்து இருப்பார்களா, மறுத்து இருப்பார்களா? தி.மு.க. மீது பழிவாங்கும் செயலை ஜெயலலிதா தொடங்கிவிட்டார் என்று தி.மு.க. கட்சியினர் பிரசாரம் செய்து, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அதிமுக அரசு வெளியி்ட்ட அறிக்கை இது என கருணாநிதி தரப்பு கூறுகிறது.

கடந்த 2002-ம் ஆண்டு, மார்ச் 2-ந்தேதி ஜெயலலிதாjayalalithaa முதல்வராக பதவி ஏற்றபோது, தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், மு.க. ஸ்டாலின் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்கு 18-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. அப்போது இதேபோல் கடிதத்தை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். ஆனால், ஒரே ஒரு வித்தியாசம் அப்போது தமிழில் கடிதத்தை வெளியிட்டார். இப்போது ஆங்கிலத்தில்அறிக்கை வெளியிட்டுள்ளார் அவ்வளவு தான் என் ஸ்டாலின் ஆவேசமாகக் கூறி கருணாநிதியை சந்திக்க கிளம்பினார்.

இந்த அறிக்கை குறித்து ஸ்டாலினுடன் கருணாநிதி கோபாலபுரத்தில் நடத்திய டிஸ்கசன் உங்கள் நியூஸ் நிருபரின் டெலிபதி மூளைக்கு எட்டியது.

ஸ்டாலின்: அப்பா!

கருணாநிதி: என்ன மை சன்

ஸ்டாலின்: நீங்க நேத்து ஒரு விட்ட அழுகை அறிக்கையயை அந்த அம்மா அதுக்கு சாதகமான பாராட்டா மாத்திடுச்சி

கருணாநிதி: என்ன சொல்றே நீ, எப்படி!

ஸ்டாலின்: என்ன நொப்படியா! இதுவரைக்கும் தமிழ் நாட்டுல நீங்கதான் ராஜ தந்திரின்னு சொல்லிட்டு திரிஞ்சீங்க

கருணாநிதி: அதுல என்ன சந்தேகம். எப்போதும் நான் தான் தமிழகஅரசியலின் சாணக்கியன்.

ஸ்டாலின்: கடுப்ப கிளப்பாதீங்க! அந்த அம்மா வந்ததுக்கு நன்றி, தி.மு.க, அ.தி.மு.க இணைந்து செயல்படும்னு சொல்லி உனக்கும் மேல ராஜ தந்திரியா மாறிட்டாங்க. தி.மு.க. ஒழிகன்னு சொல்லிருந்தா கூட சந்தோசப்பட்டுருப்பேன். கூட்டா செயல்படுவோம்னா நான் எப்பவுமே முதல்வராக முடியாதா…

கருணாநிதி: யோசிக்க வேண்டிய விஷயம்தான்

ஸ்டாலின்: என்னத்த யோசிச்சிங்க, நீங்க எனக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சித் தலைவர் பதவியோ, முதல்வர் வேட்பாளராவோ கொடுத்திருந்தா, மத்தவங்களும் மதிப்பாங்க, ஆனா நீங்க இருக்க வரைக்கும் நான் எப்பவுமே நம்பர் டூ தானே…

ஸ்டாலின் தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்கிறார்.

There are no comments yet