சென்னை: நடந்து முடிந்த தமிழக தேர்தலில் மரண அடி வாங்கி டெபாசிட் இழந்த கையோடு, தமிழர்களை காப்பாற்ற இலங்கையில் போட்டியிட சீமான் முடிவு செய்துள்ளதாக அவரது தம்பிகள் கூறுகின்றனர்.
இது குறித்து சீமான் கூறியதாவது: பெருகி ஓடிய பண வெள்ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நடுவே, இறுதி வரை சமரசமில்லாமல் பெருத்த நம்பிக்கைகளோடு 2016 சட்டமன்றத் தேர்தலை சந்தித்துச் சாதித்த என்னுயிர் நாம் தமிழர் தம்பிகளுக்கு என் புரட்சி வாழ்த்துகள். முதன்முறையாக இந்தத் தேர்தலில் களமிறங்கி, ஓய்வற்று, உறக்கமற்று போராடிய ஆயிரக்கணக்கான இலட்சிய உறுதிக் கொண்ட என் உயிர்த் தம்பிமார்களை, தளபதிகளை நாம் தமிழர் கட்சி கொண்டிருப்பது எனக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதுகிறேன். மற்றவர்களைப் போல சமரசம் செய்துக்கொள்பவர்கள் நாங்கள் அல்ல, வரவிருக்கும் இலங்கைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம். மேலும் அவசியம் ஏற்பட்டால் பிரான்ஸ் மக்களவைத் தேர்தலிலிலும் இதே போன்று தனித்துப் போட்டியிடுவோம் என்று சீமான் கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த ஆண்டுதான் நடந்து முடிந்திருப்பதால், அடுத்த நான்கு ஆண்டுகளும் இலங்கையில் முகாமிட்டு ஓட்டு சேகரிக்கவும், அங்குள்ள தமிழர்களுக்கு தன் புகழ் பாடவும் அடுத்த மாதம் சீமான் இலங்கைக்கு கள்ளத் தோணியில் பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சீமானின் தம்பி ஒருவர் கூறும்போது: அண்ணன் மட்டக்களப்பில் பட்டையை கிளப்பப் போகிறார், இனிமேல் ராஜபக்க்ஷே எங்களிடமிருந்து தப்பிக்க முடியாது என்றார். சீமானின் இந்த முடிவால், தமிழக மக்களும், ஊடகங்களும், இனிமேல் என்டர்டைன்மெண்டுக்கு கேப்டனையும், வைகோவையும் மட்டுமே நம்பியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
There are no comments yet
Or use one of these social networks