தி.மு.க. வினர் நடத்தும் மது ஆலைகள் நள்ளிரவில் ஒரு மணி நேரம் மூடப்படும் – ஜெயாவிற்கு கலைஞர் வைக்கும் அதிரடி செக்

3516

சென்னை: தி.மு.க.வினருக்கு சொந்தமாக, மது ஆலைகள் இருப்பதாகக் கூறப்படுவது கற்பனையே. அவ்வாறு இருந்தாலும், தமிழகத்தில் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டதும், அவை அனைத்தையும் மூடி விடுவோம் என்று கருணாநிதியும், மகள் கனிமொழியும் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்தது அனைவரும் அறிந்ததே. இதற்கு முதல்வர் ஜெயலலிதாவும் “மதுவிலக்கு அமலுக்கு வந்தால் மது ஆலைகளை எப்படி நடத்த முடியும்? தி.மு.க.,வினர் நடத்தும் மது ஆலைகளை மூடுவதற்கும் மதுவிலக்கு கொண்டு வருவதற்கும் என்ன சம்பந்தம்? தி.மு.க.,வினர் நடத்தும் ஆலைகளை மூட எதற்காக நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும்? உடனேயே மூடிவிடலாமே?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சில்லறை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் காலையில் 2 மணி நேரம் குறைக்கப்படுவதுடன், 500 டாஸ்மாக் சில்லறை மதுக்கடைகள் மூடப்படுவது தொடர்பான கோப்பில் முதல்-அமைச்சர் liquor shopஜெயலலிதா நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். இதையடுத்து மதுக்கடைகளின் நேரம் குறைப்பு திட்டம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று அமலானது. அதன்படி காலை 10 மணிக்கு பதிலாக பகல் 12 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பிற்கு செக் வைக்கும் முயற்சியாக தி.மு.க. வினர் நடத்து மது ஆலைகள் நள்ளிரவில் ஒரு மணி நேரம் மட்டும் மூட கருணாநிதி உத்திரவிட்டுள்ளார். இதனால் தி.மு.க. வினர் நடத்து மது ஆலைகளுக்கு எந்த நட்டமும் இல்லை, அதே சமயம், ஆட்சிக்கு வராமலேயே மக்களுக்கும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்று கணக்குப் போட்டுள்ளார் என கோபாலபுர வட்டாரங்கள் தெரிவித்தன. இதை அறிந்த தி.மு.க.வினர் நாட்டில் மது உற்பத்தியை கட்டுப்படுத்திய மாவீரன் என்ற தலைப்பில் கலைஞருக்கு பாராட்டு விழா நடத்தி புகழ் மாலை சூட்ட இருப்பதாக ‘இளைஞர்’ அணி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

There are no comments yet