படம் நன்றி: விகடன்

சென்னை: ஜோதிடம், ஜாதகம், வாஸ்து மீது கேப்டன் விஜயகாந்திற்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. தேர்தலில் வெற்றி பெற, ஜோதிடர் சொன்ன ஆலோசனையை ஏற்று, மக்கள் நலக் கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்றது. கட்சியின் மாநில நிர்வாகி ஒருவரின் பரிந்துரையில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வாஸ்து ஜோசியர் ஒருவரை விஜயகாந்த் சந்தித்தார். அவர் தெரிவித்த யோசனை படி, சென்னை, கோயம்பேட்டில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தின் பிரதான வாசலை, தென் மேற்கு மூலைக்கு மாற்றி அமைத்தார். ஆனால், தேர்தல் முடிவு தலை கீழாக மாறியதால், தேர்தல் தோல்வி குறித்து, தீவிர ஆலோசனையில் விஜயகாந்த் இறங்கினார். ஜோதிடர்கள், வாஸ்து நிபுணர்களையும் அழைத்து விசாரித்தார்.

vijayakanth premalatha

அதன் படி, மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஜோதிடர் தெரிவித்த யோசனையின்படி, கட்சியின் பெயரை மாற்ற கேப்டன் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் பெயர் ‘அ’ அல்லது ‘ஆ’ என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் வகையில் பெயர் இருக்க வேண்டும் என ஜோதிடர் கூறியுள்ளாராம். அ.தி.மு.க. மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளைப் போன்று வெற்றி பெற, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் நாடுகளில் புகழ் பெற்ற இந்த ஜோதிடர் ஆலோசனை கூறியுள்ளார். இந்த தகவலை அடுத்து வைகோ, நேற்று கேப்டனை அவரது சாலிகிராமம் அலுவகத்தில் சந்தித்து, ‘அம்மா தி.மு.க. என்ற பெயரை பரிந்துரை செய்ததாகத் தெரிகிறது. ஆனால் ‘அம்மா’ என்பது ஜெயலலிதாவைக் குறிக்கும் என்பதால் விஜயகாந்த் இதை நிராகரித்து விட்டாராம்.

மச்சான் சுதிஷையும், மனைவி பிரேமலதாவையும் மட்டுமே இந்த கட்சி பெயர் மாற்றும் விஷயத்தில் நம்புவேன், மற்ற யார் யோசனையையும் கேட்க மாட்டேன் என்ற முடிவில் விஜயகாந்த் இருக்கிறார். இந்நிலையில், பிரேமலதாவை அவரது கட்சியினர் ‘அண்ணி’ என்று அன்போடு அழைப்பதால், கட்சிக்கு ‘அண்ணி தி.மு.க.’ என பெயர் மாற்றம் செய்ய கேப்டன் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

There are no comments yet