சென்னை: சமீபத்தில் அடையாறு அருகே நடுரோட்டில் வைத்து, இளைஞரை கன்னத்தில் அறைந்தது அடுத்த படத்திற்கான ஒத்திகை என்று நடிகர் சூர்யா விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கூறப்படுவதாவது: கேமரா இல்ல, டைரக்டர் இல்ல, செட் இல்ல என்று ஒரு படத்தில் சந்தானம் கூறுவது போல ஸ்டண்ட் மாஸ்டர் இல்லாமல் நடுரோட்டில் சூர்யா அரங்கேற்றிய சண்டை காட்சியால் சென்னை அடையாரில் பரபரப்பு நிலவியது. முன்பே செய்து வைத்த செட் அப் பிரகாரம் பிராட்வேயை சேர்ந்த பிரவிண்குமார் அடையாறு திரு.வி.க. மேம்பாலத்தில் ஒரு கார் ஓட்டி அம்மணியிடம் வாய்த் தகராறு செய்து கொண்டிருந்தார். அங்கே திடீரென “வந்தேண்டா மோர்காரன்” என்ற டச்சிங் பாடலுடன் சூர்யா காரில் வந்து இறங்கி ‘ஓங்கி அடிச்சா ஒன்ற டண் வெயிட்டுடா.. பாக்குறியா…பாக்குறியா…!’ என்றவாறு பிரவிண்குமார் கன்னத்தில் நட்சத்திர கிரிக்கெட் விளையாடினார். இதில் பிரவிண்குமார் மயங்கி விழுந்தார். இதன் பிறகு சூர்யா மாயாவி படங்களில் வருவது போல ‘ஸ்டாப் பிளாக்கில்’ மாயாமாய் மறைந்தார்.

திரைக்கதையின் அடுத்த கட்டமாக பிரவிண்குமார் சாஸ்திரி நகர் போலீசில் புகார் கொடுத்தார், ஆனால் சூர்யாவின் காக்க காக்க, சிங்கம் படங்களை பார்த்த போலீசார், ‘ திருநெல்வேலிக்கே அல்வாவா, ஐயா மேலேயே கம்ப்ளைன்ட்டா’ என்று சீன் போட்டனர். கார் ஓட்டிய பெண்மணியும் ‘நடு ரோட்டில் என் மானத்தை காப்பாற்றிய மாவீரர் சூர்யா’ என்று ட்விட்டரில் பஜனை பாடினார். பிரவிண்குமாரும் அமௌன்ட் வாங்கிக் கொண்டு கொடுத்த புகாரை வாபஸ் வாங்கி “சூர்யாதான் என் ஆர்யா, நீ அந்தப் பக்கம் போறியா’ என்று புகழ்ந்தார்.suriya_2854189f

இது குறித்து நமது கப்ஸா நிருபர் சூர்யாவை தொடர்பு கொண்ட போது, ” எல்லாம் பார்ட் ஆப் தி பிளான், தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி நாயகன் என்ற பட்டம் போய் தொடர் தோல்வி நாயகன் என்று எல்லோரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க, கொஞ்ச நாளா நம்மளப் பத்தி நியூஸ் ஒன்னும் வரல, அதான் அடுத்த படத்திற்கு ஒரு விளம்பரமா இருக்கட்டுமே என்று ரகசியமாக இந்த ஸ்க்ரிப்டை ஷூட் பண்ணினோம். எல்லாருமே நிஜமென்று நம்பி விட்டார்கள். யு டோன்ட்வொரி” என்று சமாதானப்படுத்தினார்.

பகிர்

There are no comments yet