சென்னை: தனது 93-வது பிறந்த நாளை ஒட்டி மகள் கனிமொழியை அதிகார பூர்வமாக சுவீகாரம் எடுக்க கலைஞர் கருணாநிதி முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஒரு திமுக உடன்பிறப்பு கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட “ராஜாத்தி அம்மாள் யார்?’ என்ற கேள்விக்கு , அப்போதைய முதல்வர் கருணாநிதி அளித்த சாதுர்யமான பதில், “என் மகள் கனிமொழியின் தாய்”. அதற்கும் முன்னதாக ஒரு வழக்கில் இருந்து தப்புவதற்காக “கனிமொழி என் மகளே இல்லை” என்று தானே நீதி மன்றத்தில் சொன்னார் கலைஞர்.


1970 களில் கலைஞர் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் உங்களுக்கு சொல்கிறேன். அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கலைஞர். தலைமுறைக்கும் தான் தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்த நேரம் அது. அதே காலகட்டத்தில் என்.கே.டி. சுபிரமணியம் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில், இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில், இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி? என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார். அந்த செய்தி முதல்வராக இருந்த கலைஞரை கோபப்பட வைத்துவிட்டது. முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைத்தது. அரசியலில் நேர்மை, தூய்மை, அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக்கொண்டவரல்லவா? ‘’ராசாத்தி… தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’ என்று கூறி நீதிமன்றத்துக்கும் போனார். செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க, அந்த காலகட்டத்தில் பத்திரிகையாளரால் எந்த ஆதாரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனை
க்கு உள்ளானதாக வரலாறு தெரிவிக்கின்றது. இன்று வரை கனிமொழி யார் என்ற புதிர் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களின் மனதில் சதிராடுகிறது. எனவேதான் என் தானைத் தலைவர் இப்போது கனிமொழியை அதிகார பூர்வமாக தனது மகளாக ஏற்க முன்வந்துள்ளார் என்று கூறினார்.

தனது 93–வது பிறந்தநாளில் கனிமொழியை தனது மகளாக அதிகார பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்து கலைஞர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 93–வது வயதில் அடியெடுத்து வைக்கும் இனிய வேளையில், என் அருமைத் தாய் அஞ்சுகம் அம்மாள், அன்புத் தந்தை முத்துவேலர், ஆசியுடன், எதையும் தாங்கும் இதயத்தோடு எனது குடும்ப கொடுமைகளை எல்லாம் தாங்கிக் கொண்டிருக்கும் என்
உயிரினும் மேலான அன்பு தொண்டர்கள் ஆதரவுடன், எனது துணைவியின் மகளும், எனது குடும்ப உறுப்பினருமான கனிமொழியை அதிகார பூர்வமாக எனது 93-ம் பிறந்த நாளில் சுவீகாரம் எடுக்க விழைகிறேன். இந்த நன்னாளில், இன்னும் என்னை நம்பிக் கொண்டு நேரத்தை விரயம் செய்யும் உணர்வில்லா மாந்தர்க்கு உணர்வூட்டுவோம், உழைப்பை மறந்து ஊழல் சாக்கடையில் புரளும் என் குடும்பத்தினரை அரசியலில் இருந்து அகற்ற உழைத்திடுவோம். திராவிடமென்று சொல்லி ஊரை ஏமாற்றும் என் போன்றோரை வேரறுக்க உரக்க குரல் கொடுப்போம் என்று கூறி என் உயிரினும் மேலான தொண்டர்களை அன்புக்கரம் நீட்டி அழைக்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருணாநிதியின் இந்த முடிவால் ஸ்டாலின் தரப்பு மிகுந்த அதிருப்தியில், கட்சி சொத்துக்களை கனிமொழி பங்கு கேட்கலாம் என்ற கவலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
There are no comments yet
Or use one of these social networks