உள்ளாட்சித் தேர்தலிலும் கே.ந.கூ தொடரும், கேப்டனை சென்னை மேயர் வேட்பாளராக அறிவிப்போம் – வைகோவின் ‘அடங்க மாட்டேன்’ பேட்டி

1787

சென்னை: தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியை உள்ளடக்கிய கே.ந.கூ உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும், அவசியம் ஏற்பட்டால் கேப்டனை சென்னை மேயர் வேட்பாளராக அறிவிப்போம் என அதன் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கூறினார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக, தேமுதிக, தமாகா, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், மதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்தது. தேமுதிக தலைvijayakanth vaikoவர் விஜயகாந்த் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில் டெபாசிட் இழந்தார். இந்த கூட்டணியில் திருமாவளவன் உட்பட ஒரு சில வேட்பாளர்கள் தங்களது சொந்த செல்வாக்கில் டெபாசிட் பெற்றனர். மதிமுக போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் டெபாசிட் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல் தமாகா போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழந்தது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சட்டப் பேரவைத் தேர்தலில் அமைந்த தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியை உள்ளடக்கிய கே.ந.கூ வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். கேப்டன் விஜயகாந்தை சென்னை மேயர் வேட்பாளராக அறிவிப்போம். தமாகா வாசனுக்கு திருச்சி அல்லது தஞ்சை நகராட்சி ஒதுக்கப்படும். தோழர் திருமா ஒரு நல்ல ‘ரிசர்வுடு’ நகராட்சி இருக்குமா என்று தேடிக் கண்டுபிடித்து போட்டியிட முடிவு செய்துள்ளார். சென்னை துணை மேயராக நான் போட்டியிட முடிவு செய்து, கடைசி நேரத்தில் வாபஸ் வாங்கவும் முடிவு செய்துள்ளேன் என்று கூறினார்.thirumavalavan

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்களின்
கேள்விக்கு “கோவில் இருக்கும் ஊரில் தேர்தலில் போட்டியிடக் கூடாது” என்று என் ஆசான் தந்தை பெரியார் கூறியுள்ளார். அவரது கொள்கை வழி வந்த நான், மிகப் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் இருக்கும் திருப்பரங்குன்றத்தில் எவ்வாறு போட்டியிடுவேன் என்ற எதிர் கேள்வி எழுப்பி செய்தியாளர்களையே மடக்கினார் வைகோ.

There are no comments yet