ஓட்டுக்கு பணம் கொடுத்த நாங்களும் முதலீட்டாளர்கள்தான் – அரசின் அடுத்த முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க புது எம்.எல்.ஏ.க்கள் விருப்பம்

253

சென்னை: அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதால், சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட தொழில் நிறுவனங்களை, தொழில் துறை அதிகாரிகள், அவசர கதியில் மீண்டும் தொடர்பு கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக, இதுவரை நடைபெற்றுள்ள பணிகள் தொடர்பான கோப்புகளை, முதல்வர் மற்றும் புதிய அமைச்சருக்கு காட்டுவதற்காக வேகமாக தயார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் முடிந்து பதவி பிரமாணம் எடுத்தே கையேடு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தங்களையும் அடுத்த அடுத்த முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக செய்திகள் கூறுகின்றன. இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.க. வை சேர்ந்த சோடா புட்டி சோமாரியும், தி.மு.க. வின் சைக்கிள் செயின் சங்கிலியும் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: இந்த தேர்தல்ல நாங்க ஜெயிச்சு வர்றதுக்கு பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும். அங்கங்க பணம் கொடுத்து, வாக்களர்களை சரிக்கட்டி ஓட்டுப் போட சொன்னோம். tamil nadu investment logoஅது மட்டுமல்லாம பணம் வாங்க மாட்டேன்னு சொன்னவங்கள மிரட்டி எங்களுக்கு ஓட்டுப் போட வெச்சோம். இதுல இந்த தேர்தல் கமிசன் வேற அப்பப்ப எங்களுக்கு தொந்திரவு கொடுத்தது. இத்தனை இடையூறுகளையும் தாண்டி நாங்க ஜெயிச்சு எம்.எல்.ஏ ஆனதுக்கு  காரணம் எங்களோட வியாபார மூளைதான். இத்தனை பணத்தையும், எங்களுடைய நேரத்தையும் முதலீடு பண்ணிதான் நாங்க சட்டமன்றத்துக்கு வந்திருக்கோம். அதான் அரசாங்கம் அடுத்த தடவ முதலீட்டாளர் மாநாடு நடத்தும் பொது எங்க மாதிரி  அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்து கவுரவிக்க வேண்டும் என்று அம்மாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறினார்.

There are no comments yet