சென்னை: காயிதே மில்லத்தின் 121ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் பெரிய பள்ளிவாசலில் உள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கச்சத்தீவை மீட்பதாக, முதல்வர் ஜெயலலிதா, ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். சட்டசபையிலும் இதுபற்றி பேசியுள்ளார்; அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், இதுபற்றி குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே, கச்சத்தீவை தமிழக முதல்வர் ஜெயலலிதா மீட்க உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

இது குறித்து இன்று உடன் பிறப்புக்கு கலைஞர் கருணாநிதி எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தவில்லையே என்ற ஆதங்கத்தில் என்னை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு இப்போது இந்த அம்மையாருக்கு வக்காலத்து வாங்குகிறார் திரு. ஸ்டாலின். நேற்று “சொன்னபடி கச்சத்தீவை தமிழக முதல்வர் ஜெயலலிதா மீட்க உரிய நடவடிக்கை எடுப்பார்” என்று கூறியிருக்கிறார். இவ்வாறு கூறியிருப்பதன் மூலம் ஸ்டாலின் அ.தி.மு.க.வின் கொ.ப.செ. ஆக மாறிவிட்டாரோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது.Stalin

எந்தக் காலத்தில் நாமெல்லாம் சொன்னதை செய்திருக்கிறோம். கச்சத்தீவை மீட்போம் என்று கூறித்தானே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குக் கேட்கிறோம். இப்போது நம்மை பழி வாங்குவதற்காக இந்த அம்மையார் கச்சத்தீவை உண்மையிலேயே மீட்டு விட்டால், பிறகு நாம் என்ன சொல்லி வாக்குக் கேட்க முடியும். வேண்டுமானால் நாம் முன்பு செய்த மாதிரி, கச்சத்தீவை திரும்பவும் இலங்கைக்கு தாரை வார்ப்போம், அதாவது மீட்ட கச்சத்தீவை திருப்பி இலங்கைக்கே கொடுப்போம் என்று சொல்லலாம். எனவே இனிமேலாவது ஸ்டாலின் அவர்கள் தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். இந்த மாதிரி தான் தோன்றித்தனமாக பேசாமல், கட்சி வளர்ச்சிக்கும், குடும்ப வளர்ச்சிக்கும் நிதி திரட்டும் வேலையில் மட்டும் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

There are no comments yet