வாங்கிய பணத்திற்கு, கடமையை ஆற்றிய உங்களுக்கு நன்றி, இனி ஐந்து ஆண்டு கழித்துதான் வருவேன் – ஜெயாவின் ஆர் கே நகர் விசிட்

498

சென்னை : சட்டமன்றத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளப் பெருமக்களை நேரில் சந்தித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்றுபேசியதாவது: ஆர்.கே.நகர் தொகுதிவாழ் மக்களாகிய உங்களுக்கு நான் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். என்ன இருந்தாலும், வாங்கிய பணத்திற்கு நேர்மையாக, கடமை தவறாமல் ஓட்டுப் போட்டு 2-வது முறையாக தொடர்ச்சியாக ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்தமைக்காக உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

போன தடவை 1,50,000 ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்த நீங்கள், இந்த முறை வெறும் 39,000 ஓட்டு வித்தியாசத்தில்தான் என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இதிலிருந்தே நீங்கள் பணம் போதவில்லை என்பதை எனக்கு மறைமுகமாக உணர்த்தியுள்ளீர்கள். அடுத்த தேர்தலில் அதற்கு ஆவன செய்கிறேன்.gallerye_191148289_1536796

நடந்து முடிந்த தேர்தலின் போது இங்கே உங்களிடம் வாக்கு கேட்க நான் வந்த போது உங்களுக்கு பல வாக்குறுதிகளை நான் அளித்திருப்பேன். அவற்றையெல்லாம் மறந்து விடுங்கள். தமிழ்நாட்டிலேயே ஆர்.கே. நகர் தொகுதி என்றால் அது ஒரு மாதிரியான தொகுதியாக விளங்குகின்ற வகையில் இந்த தொகுதியை மாற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

There are no comments yet