சென்னை: நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல, பசுக்களை கொடுமைப் படுத்தக் கூடாது என்பதற்காகவே ஜல்லிக்கட்டு வேண்டாம் என்று சொன்னேன் என, தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னையில், விலங்குகள் நல அமைப்பு சார்பில் நடந்த விழாவில் பங்கேற்ற விஷால், ஜல்லிக்கட்டு தடைக்கு வரவேற்பு அளித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, நடிகர் விஷாலுக்கு எதிராக, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஒன்று திரண்டனர். திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் அவரது கொடும்பாவியை எரித்தனர்.
இந்த நிலையில், நடிகர் விஷால் நேற்று நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: ‘நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல, தேவையில்லாமல் ஜல்லிக்கட்டில் பசுக்களை வதை செய்கிறார்கள். பசு என்றால் பத்தும் பறக்கும் என்பார்கள், அதுபோல் பசு மேல் எனக்கு பாசம் அதிகம், அதனால் நான் ஆவின் பால் கூட குடிப்பதில்லை, தனியார் நிறுவனங்களின் பால் அல்லது ஆட்டுப் பால்தான் தினமும் குடிக்கிறேன். தமிழில் இளைஞர்களை காளையர் என்று கூறுவதுண்டு, எனவே ஜல்லிக்கட்டில் இனிமேல் மாடுகளுக்கு பதிலாக கட்டு மஸ்தான இளைஞர்களை ஓடவிட்டு, அவர்களை அடக்குபவர்களுக்கு பரிசு கொடுக்கலாம் என்பது எனது தாழ்மையான யோசனை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று நடிகர் விஷால் கூறினார்.
‘
There are no comments yet
Or use one of these social networks