சென்னை: சமீபத்தில் காரைக்குடியில் தே.மு.தி.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில், பங்கேற்று பேசுகையில் “திரைப்படத்தில் ஒரு ஹீரோ முதலில் அடி வாங்கி கொண்டே இருப்பார். தொடர்ந்து அடி வாங்கி எழுந்து வில்லனை வீழ்த்தும் ஹீரோ போல் விஜயகாந்த் மீண்டும் எழுந்து வருவார்” என பிரேமலதா தெரிவித்திருந்தார்.

இது குறித்து மேலும் விளக்கம் பெற நமது கப்ஸா நிருபர், பிரேமலதாவை நிஷ்டையில் சந்தித்து எடுத்த பேட்டியில் பிரேமலதா கூறியதாவது: கேப்டன் மீண்டும் எழுந்து வருவார். இந்த தேர்தலில் எதிரிகளுக்கு அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இந்த நிலைமைன்னா, அடி வாங்குனவன் உசுரோட இருப்பானா, கேப்premalathaடனுக்கே இந்த கதி என்றால் எதிரிகளின் நிலையை நினைத்துப் பாருங்கள்.

கேப்டன் பல படங்களில் ஒரு ஹீரோவாக வில்லன் அடிக்க, அடிக்க விழுந்து கொண்டே இருப்பார். மறுபடியும் மீண்டும் எழுந்து நின்று திரும்ப விளாசுவார். ஆனால் என்ன கேப்டன் குத்தும் கும்மாங்குத்து ஒவ்வொண்ணுக்கும் எவ்ளோ ரி டேக் எடுக்கணும் தெரியுமா? அப்பறமா ரஷ் போட்டு பார்த்து ஊஹும் இது சரியில்லேன்னு மறுபடி சூட் பண்ணி.. இதெல்லாம் பண்ணிதான் சினிமால சண்டை காட்சிகளில் கேப்டன் ஜொலிக்கிறார். ஒரு சீன் எடுக்கறதுக்குள்ளே கேப்டன் பத்து ஆப்பிள் ஜூஸ் குடிசிருவாறு. ஆனா என்ன அரசியல்ல இதெல்லாம் கொஞ்சம் கஷ்டம். தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிறாங்க.vijayakanth

தேர்தலுக்கு முன்பு, கேப்டனை, ஜப்பானில் கூப்பிட்டார்கள, சிங்கப்பூரில் கூப்பிட்டார்கள், ஏன் சீனாவிலிருந்து கூட ஒரு ஆபர் வந்தது. கேப்டன் எல்லாவற்றையும் உதறிவிட்டு உங்களுக்காக தேர்தலை வைகோவோடு சேர்ந்து சந்தித்தார். தே.மு.தி.க. எடுத்த முடிவு தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லதை நினைத்து எடுத்த முடிவு. அதேபோல் முள்பாதை, மலர் பாதை என இரண்டு பாதை கேப்டன் முன்பு வைக்கப்பட்டது. கேப்டன் செருப்பு இல்லாமல் முள்பாதையில் நடந்தார். முள்பாதையில் நடப்பவர்களுக்கு முள் குத்தும் என்பது உங்களுக்குத் தெரியாதா?

நாங்க இதுவரை கோழி பிரியாணி, கொக்கு பிரியாணி தான் சப்பிட்டு இருக்கோம், தேர்தலுக்கு அப்புறம் இப்போ கேப்டன் ரெம்ப வீக்கா இருப்பதால் பீனிக்ஸ் பறவையில் பிரியாணி அல்லது சூப் பண்ணி சாப்பிட்டால் கொஞ்சம் தெம்பு வரும் என்று நாட்டு வைத்தியர் சொன்னதால் இனிமேல் கேப்டன் பீனிக்ஸ் பிரியாணி சாப்பிட்டு ஹீரோ போல் பறந்து வருவார் என்று பிரேமலதா கூறினார்.

There are no comments yet