சென்னை: தமிழகத்தில் சமஸ்கிருதம் திணிக்க முயற்சிகள் முறியடிக்கப்படும் என சென்னையில் நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்திற்கு இடம் கிடையாது என்றும், சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் ஓட, ஓட விரட்டுவோம் என்றும் திருமண விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி திருமணத்தின்போது சமஸ்கிருதத்தில் மந்திரம் சொன்ன புரோகிதரை சவுக்கை சுழற்றி அடித்து ஓட ஓட விரட்டினார். இதன்னால் திருமணத்திற்கு வந்திருந்த கூட்டம் அலறி அடித்து ஓடியது.
இதைத் தொடர்ந்து அவர் பேசும் போது தமிழ் சிறந்த மொழியாக இருக்கும் போது பிற மொழிகளை திணிப்போர் இருக்கத்தான் செய்கின்றனர். தமிழகத்தில் வட மொழியை திணிக்க நினைத்தால் தமிழர்கள் ஒவ்வொருவரும் சவுக்கை எடுத்து கிளர்ந்து எழ வேண்டும். நானும் என் குடும்பமும் மட்டுமே இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் தமிழ் நாட்டில் ஏக போக உரிமையாளர்கள். எனது பேரன்களும், குடும்பத்தினரும் இந்தி படித்து மத்திய அமைச்சரவையில் இடம் பெறலாம். நான் ராமானுஜர் தொடர் எடுத்து அதை குடும்ப டி.வியில் காட்டி பணம் பார்க்கலாம். ஆனால் தமிழ் நாட்டில் வேறு யாரும் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் படிக்கக் கூடாது, பேசக் கூடாது.
மேலும் முன்னொரு காலத்தில் இந்தியை சொல்லி, உங்களை ஏமாற்றி பதவிக்கு வந்தது போல், எனக்கு இப்போது சமஸ்கிருதம் கிடைத்துள்ளது. இதை வைத்து கொஞ்ச நாள் மொழி வியாபாரம் செய்யலாம். அனால் எனது குடும்ப நிறுவங்களுக்கும், எனது பேரன் கம்பெனிகளுக்கும், அவை எடுக்கும் டப்பா படங்களுக்கும் நாங்கள் ஆங்கிலத்தில் மட்டும் தான் பெயர் வைப்போம் என்று கூறி கருணாநிதி மணமக்களை வாழ்த்தினார்.
There are no comments yet
Or use one of these social networks