சென்னை: தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று மாலை, 5:00 மணிக்கு, கட்சியின் தலைமை அலுவலகமான, சென்னை அறிவாலயத்தில் நடக்கிறது. சட்டசபை கூட்டத்தொடர் நாளை துவங்குகிறது. இதில், தி.மு.க., தரப்பில் பேசப்பட வேண்டிய விஷயங்கள், எழுப்பப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, இந்த கூட்டம் நடக்கிறது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட, 89 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கின்றனர். முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பேச்சுக்கு, பதிலடி கொடுப்பது பற்றியும், மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பது குறித்தும், எம்.எல்.ஏ.,க்களுக்கு, சில ஆலோசனைகளை, கருணாநிதி கூறுவார் எனவும் சட்டசபையில் சேலை அவிழ்ப்பு, மைக் எறிதல் பயிற்சி துரைமுருகன் தலைமையில் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முதல் கட்ட பயிற்சியை முடித்த பின்னர், தி.மு.க எம்.எல்.ஏ.,க்களுக்கு தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், வட சென்னை செயலாளர் பிளேடு பாண்டியன் உதவியோடு தற்காப்புக் கலையும், நாற்காலி உடைப்பு பயிற்சியும் அளிக்கப்படும் என தி.மு.க. தலைமைக் ‘கலக’ செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
There are no comments yet
Or use one of these social networks