தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க வீடு தோறும் இட்லிக் கடை – பிரதமர் மோடியிடம் 1000 கோடி நிதி கேட்டார் ஜெயலலிதா

369

புது தில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் சந்தித்து பேசினார். மோடிக்கு பச்சை நிற சால்வையும், பூங்கொத்தும் கொடுத்து வாழ்த்து தெரிவித்த ஜெயலலிதா, தமிழக திட்டங்கள் தொடர்பான 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை நரேந்திர மோடியிடம் வழங்கினார். இதன்பிறகு இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க வீடு தோறும் இட்லிக் கடை அமைக்கும் திட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் ஜெயலலிதா கூறியபோது, மோடி அதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அம்மா உணவகங்கள் மூலம் இட்லி, தோசை, மற்றும் தயிர் சாதம் போன்ற அத்தியாவசிய உணவு வகைகளை இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்ற வகை செய்யும் வகையில் தொடர்பு அலுவலர் ஒருவரை நியமிக்குமாறு பிரதமர் மோடியை தமிழக முதல் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.jaya-modi

பிரதமரும் தான் அடுத்த முறை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்லும்போது அங்கும் அம்மா உணவாக உணவுகளுக்கு ‘மார்க்கெட்டிங்’ செய்வதாக உறுதியளித்தார். மேலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வைத்துள்ள அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து, உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு ஜெயலலிதா மோடியிடம் விடைபெற்று கிளம்பினார்.

There are no comments yet