சென்னை: ரஜினியின் உடல்நிலை குறித்து வெளியான வதந்திகளுக்கு ரஜினியே விளக்கம் அளித்திருக்கிறார். ‘கபாலி’ படத்தின் பணிகள் முடிந்தவுடன் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு ஒய்வுக்கு சென்றார் ரஜினி. ஆனால், ரஜினி ஒய்வுக்கு செல்லவில்லை, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வெளியானது.rajini_death_news

இந்நிலையில், இன்று (ஜூன் 16) காலை ரஜினி மாரடைப்பால் காலமானதாக இலங்கையில் இருந்து செயல்படும் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது. ரஜினியின் உடல்நிலை குறித்து இணையத்தில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. இதனால், மீண்டும் சர்ச்சை எழுந்தது.

rajini twitter handleஇதைத் தொடர்ந்து தனது உடல்நிலை குறித்து ட்விட்டர் பக்கத்தில் ரஜினி கூறியுள்ளதாவது: இந்த குழப்பம் ‘கபாலி’க்காக, சில சமயங்களில் வதந்திகளும் நன்மைக்குத்தான். அடுத்த மாதம் படம் வெளிவரும் நிலையில் படத்திற்கு இதைவிட நல்ல விளம்பரம் இருக்க முடியாது. நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது. சில சமயங்களில் வர வேண்டிய நேரத்துல கூட வரமாட்டேன். அதனாலே என்னைப் பற்றி கவலைப் பட்டு நீங்கள் உங்கள் மனதையும், உடம்பையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று தமிழக மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

There are no comments yet