கருணாநிதிக்கு சட்டமன்றத்தில் நாற்காலி கிடைக்கும் வரை போராட்டம் – ஜெயாவுக்கு ஸ்டாலின் மிரட்டல்

469

சென்னை: தலைவர் கலைஞருக்கு நாற்காலி தராவிட்டால் சபாநாயகர் முன்வராவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, கருணாநிதியுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம், போராட்டம் வெடிக்கும்” என, எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க., பொருளாளருமான ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: தி.மு.க., தலைவர் கருணாநிதி, இந்த முறையாவதை சட்டமன்றம் சென்று முதலமைச்சர் நாற்கலியில் உட்காரலாம் என்று நினைத்தார். அந்த ஆசை நிராசையானது. கிடைத்த எதிர்க்கட்சி தலைவர் நாற்காலியையும் செல்ல மகனான எனக்கு கொடுத்துவிட்டு இப்போது சட்டமன்றத்தில் உட்கார நாற்காலி இல்லாமல் அவதிப் படுகிறார். மனசாட்சி இல்லாத ஜெயலலிதா என் அப்பாவின் நாற்காலி ஆசையை புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்.Kaunas - Stalin

தலைவர் கலைஞருக்கு நாற்காலி தராவிட்டால் தி.மு.க., தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை, கட்சி தலைவருடன் கலந்தாலோசித்து முடிவு செய்வோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறும் போது, ”பெருந்தன்மை என்பது, இந்த ஆட்சியில் சிறிதளவும் இல்லை, நாங்கள் ஆட்சியில் இருந்தபோது எனக்கு சட்டமன்றத்தில் துகில் உரியும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த ஆட்சியில் அது கொஞ்சம் சிரமம்தான்” என்றார்.

There are no comments yet