சென்னை: 15-வது சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது மாநில அமைச்சர் பதவிக்கு இணையான அந்தஸ்து கொண்டது. எனவே அவருக்கு அமைச்சர்களுக்கு வழங்கப்படுவது போல சுழலும் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட கார் வழங்கப்படுவது வழக்கம். அதுபோல ஸ்டாலினுக்கு இன்னோவா கார் வழங்கப்பட்டது. அதனை திரும்ப ஒப்படைத்துள்ள அவர், தனது சொந்த காரை பயன் படுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளார். காரில் கட்டக்கூடிய மூவர்ண கொடி, அரசு இலட்சினை ஆகியவற்றை மட்டும் அவர் பெற்றுக் கொண்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.stalin car

இது குறித்து நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது: எனக்கு கொடுத்த இன்னோவா கார், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தியது என்று சொன்னார்கள். ஓ.பி.எஸ் பயன்படுத்திய கார் என்பதால் அதில் குனிந்து, வளைந்துதான் ஏற வேண்டியிருக்கும். ஏற்கனவே இளைஞர் அணித்தலைவர் ஆன எனக்கு மூட்டு வலியும், முடக்க வாதமும் வந்து விட்டது. எனவே தான் நான் ஓ.பி.எஸ் யூஸ் பண்ணிய கார் வேண்டாம் என்று சொன்னேன் என்று கூறினார்.

அவரிடம் நிருபர்கள் ‘பிறகு எப்படி சட்டமன்றம் செல்வீர்கள், பஸ்ஸில் போவீர்களா? என்று கேட்டதற்கு ஸ்டாலின் கூறியதாவது “எனக்கென இதுவரை சொந்தமாக எந்த
udayanidhiமோட்டார் வாகனமும் இல்லை என வேட்புமனு தாக்கலின்போது குறிப்பிட்டிருந்தேன், சி.பி.ஐ., ரெய்டில் சிக்கியிருக்கும் ஹம்மர் என்ற அதி சொகுசு காரை எனது மகன் உதயநிதி பயன்படுத்தி வருகிறார், அதை இரவல் வாங்கி பயன்படுத்துவேன் என்று ஸ்டாலின் கூறினார்.

பகிர்

There are no comments yet