சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சென்ற 5 ஆண்டு கால ஆட்சியில் எந்த ஒரு அமைச்சரும், குனிந்த தலையை நிமிர்த்தியது இல்லை, அதுமட்டுமின்றி அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை தங்களது வாழ்நாள் பாக்கியமாக கருதி வந்தனர். ஆனால், இந்த தேர்தலுக்குப் பிறகு பொது இடங்களில் காலில் விழுவதை தவிர்க்குமாறு அடிமைகளுக்கு ஜெயா ரகசிய உத்திரவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.ops yoga

ஆனால், ஆண்டாண்டு காலமாக உருண்டு புரண்டு வணங்கிய அடிமைகளுக்கு இது ஒரு பெரிய குறையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், நாளை நடைபெற உள்ள சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைத்து அமைச்சர்களும் அம்மாவின் போயஸ் தோட்டத்தைச் சுற்றி அங்கப்பிரதட்சண யோகா மேற்கொள்ளப்போவதாக நம்பத்தகாத வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

ஜெயா டீவியை தவிர இந்த நிகழ்வை படம் பிடிக்க வேறு எந்த பத்திரிகைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் அமோக வெற்றியைக் கண்டு சரத்குமாரும் அவரது கட்சியினரும் நாளைய யோகா தினத்தில் அந்தர் பல்டி யோகா அடித்து அதிமுகவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet