கச்சத்தீவை மீட்டு அங்கும் டாஸ்மாக் திறக்கப்படும் – சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

1118

சென்னை: சட்டசபையில் ஆளுநர் உரை மீதான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதம் ஆரம்பம் முதலே காரசாரமாக நடைபெற்று வருகிறது. 1991ல் கூறியபடி கச்சத்தீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.

பொன்முடிக்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: மாநில அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்டு, கச்சத்தீவை மீட்க, என்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். மத்திய அரசைஅணுகி, எந்தப் பயனும் இல்லை என தெரிந்த பின், அ.தி.மு.க., பொதுச் செயலர் என்ற முறையில், உச்ச நீதிமன்றத்தில், 2008ல், வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், தமிழக அரசு பதில் மனு தாக்கல்செய்யவில்லை. ‘மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்வதைப் பார்த்து விட்டு, தமிழக அரசு மனு தாக்கல் செய்யும்’ என, அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறினார். மத்திய அரசோ, ‘அது முடிந்து போன பிரச்னை’ என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்தது.

எனவேதான், வைகோ, சீமான் போன்றவர்களை ஒன்று சேர்த்து படையை திரட்டிச் சென்று, கச்சத்தீவை மீட்கலாம் என திட்டமிட்டுள்ளேன். கச்சத்தீவை மீட்டு அங்கு, முதலில் கருணாநிதியின் மொத்தக் குடும்பத்தையும் அங்கு குடியேற்றலாம் என நினைக்கிறேன். அதன் மூலம் குறைத்து பட்சம் தமிழக மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். மேலும் கட்சத்தீவிலும் நமது அரசின் அடையாளமான டாஸ்மாக் கடைகளை திறந்து நமது புகழ் அங்கும் பரவ ஆவண செய்யப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

There are no comments yet