புது டெல்லி: விஜய் மல்லையாவுடன் இணைந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திருட்டு தொழிலதிபர்களையும், வரி ஏய்ப்பு செய்பவர்களையும் கோடிகளில் கடன் பாக்கி வைத்த கேடிகளையும் குஷிப்படுத்தும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி புதியதாக பாஸ்போர்ட் பெற போலீஸ் விசாரணை இனி தேவையில்லை. பத்தாம் வகுப்பில் அரும்பு மீசை பிஞ்சு முகத்தில் எடுத்த டிரைவிங் லைசென்ஸ், தனக்கே தன்னை அடையாளம் தெரியாத புகைப்பட வாக்காளர் அட்டை, ஒன்றுக்கும் உபயோகமற்ற ஆதார் அட்டை, கி.மு.வில் வயது அப்டேட் செய்த ரேசன் கார்டு, சாணிப் பேப்பரில் அச்சடித்த மின் கட்டண ரசீது, குட்டிச்சுவர் ஓனர் கொடுத்த வாடகை ரசீது, இவற்றுள் ஏதாவது ஒன்றை கொடுத்தால் போதுமானது. போலீஸ் விசாரணை தேவையில்லை.

இந்த முறை அமலுக்கு வந்தால் கோடிகளில் கடன் வாங்கிய விஜய் மல்லய்யா போன்றவர்கள், ஆள் கடத்தல், சிலை கடத்தல், போதை மருந்து கும்பல், பல முறை திருமண கல்யாண ராமன்கள் – ராணிகள், சீட்டு பிடித்து கம்பி நீட்டுவோர், பீப் பாடல் போன்ற சர்சைகளில் சிக்கும் மீடியா பரசனாலிடிகள் மிகுந்த பயன் பெறுவாரகள் என்று தெரிகிறது..
மேலும் இந்த மாற்றத்தினால் குற்றவாளிகளை தப்ப விட்டுவிட்டு அரசு செலவில் வெளிநாடு செல்ல தங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று காவல் துறை அதிகாரிகளும், புலனாய்வு அமைப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
There are no comments yet
Or use one of these social networks