நான் கட்டிக் காக்கவும், கவலைப்படவும் கச்சத்தீவு ஒன்றும் அண்ணா அறிவாலயம் இல்லை – ஜெயாவுக்கு கலைஞர் காட்டமான பதில்

763

சென்னை: ‘கச்சத்தீவு விவகாரத்தில், என்னை பற்றி வசைபுராணம் பாடுவதை முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கச்சத்தீவைப் பொறுத்த வரை, அது ஒன்றும் அண்ணா அறிவாலயமோ, அல்லது கலைஞர் டிவி, சன் டிவியோ அல்ல நான் கவலைப்பட்டு கட்டிக் காப்பதற்கு. எனக்கு ஏதாவது கமிஷனோ, கோடிகளோ கிடைக்கும் என்றால் எப்போதோ அதை மீட்டிருப்பேன். ஆனால் என் குலக்கொழுந்துகள் அன்றே சொன்னார்கள் கச்சத்தீவை மீட்டு பிளாட் போட்டு விற்று விடலாம் என்று நான்தான் சற்று சுதாரிக்காமல் விட்டுவிட்டேன். தமிழக முதல்வர் என்ற முறையில் அன்றே அதை செய்திருக்க வேண்டும், இப்போது வருந்தி என்ன பயன்.

ஜெயலலிதா என்னிடம் ஒரே ஒரு முறையாவது, கச்சத்தீவை பற்றி கலந்தாலோசனை நடத்தியிருந்தால் இந்த யோசனையை அவருக்கும் தெரிவித்திருந்திருப்பேன். இவ்வாறு கருணாநிதி கூறிஉள்ளார்

There are no comments yet