சென்னை: திமுக தலைவர்  கருணாநிதி தமிழக சட்டசபைக்கு வந்து செல்லும் வகையில் உரிய இருக்கை வசதி செய்து தரப்பட்டால், கருணாநிதி சட்டசபைக்கு வருவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்று சமீபத்தில் மகன் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.  
 
கருணாநிதி இல்லாமல் சட்டமன்றம் களை கட்டவில்லை என்பதால் தமிழக முதல்வர் ஜெயலலிதா இதை  தீவிரமாக பரிசீலனை செய்து அமுல் படுத்த இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருணாநிதிக்காக நவீன முறையில் தயாரிக்கப்பட்ட படுக்கைகளாக மாறும் இருக்கைகள் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்படலாம் என்று தெரிகிறது. வெளிநாட்டு திரை அரங்கு ஒன்றில் (படம் காண்க)bed theatre இருக்கைகளுக்கு பதில் படுகக்கைகள் அமைக்கப்பட்ட படம் ஒன்று சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இதே படுக்கையையே சட்டமன்றத்தில் கருணாநிதிக்காக பயன்படுத்தலாம் என ஸ்டாலின் ஜெயலலிதாவை கேட்டுக் கொண்டிருக்கிறாராம். மேலும் தலைவருக்கு சட்டசபையில் போர் அடிக்காமல் இருக்க மானாட மயிலாட நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பையும் பிரத்யேகமாக கலைஞருக்கு வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
 இது தவிர கருணாநிதிக்கு நவீன படுக்கை, மருத்துவமனை உபகரணங்கள், நர்ஸ், மினி டாய்லட், தொண்டனுக்கு கடிதம் எழுத லேப்டாப், சேட்டிலைட் கேமரா, ஆகிய பல வசதிகள் செய்து தரப்பட உள்ளது என்றும் திமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. 

There are no comments yet