புதுடில்லி: தி.மு.க., தலைவர் கருணாநிதி, உ.பி., முதல்வர் அகலேஷ் யாதவ், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு, அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய்க்கு வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகளில் விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தற்போது, அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தல் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது ஒரு அடையாளமாக மாறிவிட்டது. முன்னர் பாதுகாப்பை திரும்ப பெற முயற்சி நடந்த போது, எதிர்ப்பு காரணமாக இந்த முயற்சி கைவிடப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவரது உறுப்பினர்கள் தேசிய பாதுகாப்பு படையில் பயிற்சி பெற்ற வீரர்கள் இசட் பிளஸ் பிரிவில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் கருணாநிதி, அகிலேஷ், லாலு மற்றும் தருண் கோகாய் ஆகியோருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வாபஸ்பெறுவது குறித்து உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து இன்று திமுக தலைவர் கருணாநிதி தனது உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: காவிப் பண்டாரங்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும். இந்த அம்மையார் டெல்லி சென்றபோதே நினைத்தேன் நமக்கு ஏதாவது சிக்கல் வரும் என்று.azhagiri-karunanidhi

அஞ்சா நெஞ்சன் அழகிரிக்கே அஞ்சாதவன்தான் இந்த கருணாநிதி, உண்மையில் மக்கள் தான் நமது குண்டர்களிடம் இருந்து தங்கள் பாதுகாப்பை பற்றி அஞ்சினார்கள், பண்டார பரதேசிகள் ஆட்சியில் இப்படிப்பட்ட அநியாயங்களை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? , காவிக்கட்சியின் ஆட்சியில் பெரியவர்களை மதிக்கும் பண்பு இல்லை. ஜனநாயக மாண்புகளை பேணிக்காக்கும் மரபு இல்லை. அதெல்லாம் மணிமேகலை அன்ணை சோனியாவின் காலத்தோடு போய்விட்டது. நான் இதைப்பற்றி எல்லாம் அஞ்சுவதில்லை. இந்த பாதுகாப்பெல்லாம் எம்மாத்திரம். கட்சிக்கும், என் குடும்பத்திற்கும் நிதி கொடுத்து காப்பாற்றும் என் உடன்பிறப்பு நீ இருக்கும் வரை எனக்கு எந்தக் கவலையும் இல்லை’ என்று கலைஞர் கூறியிருக்கிறார்.

There are no comments yet