சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 தொகுதிகளில்அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றி, காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாத கட்சி, எப்படி 8 இடங்களில் வெற்றிபெற்றது என்ற காரணத்தை அறிய தமிழக காங்., தலைவர் இளங்கோவனுக்கு ராகுல் காந்தி நெருக்கடி கொடுத்தார்.

இதற்கிடையில், கடந்த 14ம் தேதி, டில்லியில், காங்., துணைத் தலைவர் ராகுலை சந்தித்துப் பேசினார் இளங்கோவன். அப்போது, கட்சி வெற்றி குறித்து, இளங்கோவனிடம் ராகுல் காரசாரமாக விவாதித்து உள்ளார். அதை தொடர்ந்தே, இளங்கோவன், தமிழக காங்., தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, ராஜினாமா கடிதம் கொடுத்து திரும்பி உள்ளார்.rahul-sonia600

இளங்கோவனின் ராஜினாமா விவகாரத்தால், புதிய தலைவர் ஆவதற்கான போட்டி துவங்கி உள்ளது. அதில், சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், கிருஷ்ணசாமி, செல்லக்குமார், வசந்தகுமார் என, பலர் மோதுகின்றனர்.

இதற்கிடையில், ராகுல், இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைத்து, 8 தொகுதிகளில் வென்ற காரணத்தை அறியாமல் விடமாட்டேன், அது வரை எனக்கு தூக்கமில்லை என்று சோனியாவிடம் கூறியதாக தெரிகிறது.

There are no comments yet