Image Credit: Vikatan

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. போட்டியிட்ட 104 தொகுதியிலும் தோல்வியை தழுவியது தே.மு.தி.க. இந்த தேர்தலில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தும் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில், 14 மாவட்ட செயலாளர்கள் தற்போது விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். எங்களிடம் வசூலித்த 500 கோடியை உடனே கொடுக்கவேண்டும் என்று கேப்டனுக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர்.Vijayakanth-cries

இது குறித்துக் ஒரு விஜயகாந்த் ரசிகர் கூறியதாவது : கேப்டன் தேமுதிக கட்சியை ஆரம்பித்தது ஒன்றும் மக்களின் சேவைக்காக அல்ல. சினிமாவில் ஓய்வு பெற்ற பிறகு, சம்பாரிக்க ஒரு வழி தேவை. அதற்காக ஒரு கட்சியை ஆரம்பித்தார். அது குடும்ப தொழில் ஆகவும் மாறியது. அதற்கு அவர் ஐம்பது கோடி ரூபாய் செலவு செய்தார். ஐநூறு கோடி சம்பாரித்தார். இது அவரின் திறமை. தேமுதிகவில் சேர்ந்தவர்கள் என்ன மக்களுக்கு சேவை செய்யவா சேர்ந்தார்கள்? அவர்களும் அரசியலில் புகுந்து கல்லா கட்ட வந்தவர்கள். அதற்காக வீட்டை விற்று செலவு செய்தார்கள். என்ன செய்வது? கேப்டனின் முதல்வர் பேராசையால், தேமுதிக வியாபாரம் ஓடவில்லை. திரைப்படம் ஓடவில்லையெனில், ரஜினியிடம் மீண்டும் முதலீடு செய்த தொகையை கேட்பது போன்று, கேப்டனிடம் கேட்கிறார்கள்.

ஆனால் கேப்டன் இதற்கெல்லாம் பயப்படமாட்டார், கட்சியை பா.ஜ.கவுடன் இணைப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார், பேரமும் முடிவாகி விட்டது. சமீபத்தில் பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகர், இயக்குனர் விசு மூலம் அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. எனவே உள்ளாட்சித் தேர்தலில் கேப்டன் மேயர் வேட்பாளராவது உறுதி என்றார்.

There are no comments yet