சென்னை: தமிழகத்தில், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங் களும், பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு எதிரான குற்றங்களும், சமீப நாட்களாக அதிகரித்து வந்தன. கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகி வந்ததால், போலீசார், ரவுடிகள் மற்றும் கூலிப்படையினருக்கு எதிரான வேட்டையில் இறங்கினர். சென்னை உட்பட, மாநிலத்தின் பல்வேறு பகுதி களிலும், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று இரவு வரை நடைபெற்ற அதிரடி நட வடிக்கையில் 1,150 ரவுடிகள் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கேள்வி–பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது: அம்மையாரின் ஆட்சியில் திமுக வை அடியோடு அழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார். நேற்று ஒரே நாளில் முதல்வரின் தலைமையில் இயங்கும் காவல்துறை 1,150 ரவுடிகளை கைது செய்துள்ளது. இவர்கள் ரவுடிகளே அல்ல, திமுகவின் தொண்டர்களும் வருங்கால எம்.எல்.ஏ மற்றும் எம்.பி க்கள் ஆவார்கள். இவர்களை கைது செய்ததன் மூலம் திமுகவின் வாக்கு வங்கியைக் குறைக்க ஜெயலலிதா சதி செய்வது கண்ணடி போல் தெளிவாகத் தெரிகிறது. இது மட்டுமல்லால் ரவுடிகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளதால், பயத்தில் பல ரவுடிகள், வெளிமாநிலங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர். இதன் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வாக்குகளைக் குறைக்கவும், காவல் துறையை ஏவி விட்டு திமுகவை தோற்கடிக்க ஜெயலலிதா முயற்சிக்கிறார். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
There are no comments yet
Or use one of these social networks