சென்னை: இந்தியாவிலேயே முதன் மாதிரியாக தமிழக போலீசாருக்கு தொப்பை அலவன்ஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா முடிவுசெய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து கூறப்படுவதாவது:

வாகனங்களில் வேகமாகச் சென்று மாமுல் வாங்குவதை விட , சைக்கிள்களில் மெதுவாகச்செல்லும் போதுதான் இரவில் அக்கம் பக்கத்தை நன்றாகக் கண்காணித்தபடி செல்ல முடியும், மாமூல் சரியாக வாங்க முடியும், என்பதை உணர்ந்த கருணைத்தாய் முதல்வர் ஜெயலலிதா . இந்த கருத்தின் அடிப்படையில்தான் முந்தைய காலகட்டங்களில் போலீசாருக்கு இரவு மாமூல் கலெக்சனுக்கு சைக்கிள் வழங்கப்பட்டு இருந்தது.image004

அதை பின்பற்றும் வகையில், சென்னை போலீசாருக்கு ரோந்துப் பணிக்காக 250 சைக்கிள்களை கோட்டையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். இந்த சைக்கிள்களில் இளிச்சவாய் பாதசாரிகளையும், லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டிகளையும் எளிதாக கண்டுபிடித்து மாமூல் வாங்கும் வகையில் வசதிகள் உள்ளன. இதை அல்லாமல் தமிழக போலீசாருக்கு வயிறு தொப்பையை வளர்க்க கைதிகள், காவல் நிலையம் வருவோர் வாங்கித்தரும் பிரியாணி பற்றாக்குறையை நீக்க ‘தொப்பை அலவன்ஸ்’ என்னும் புதுமாதிரியான தினப்படியை முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதன் மாதிரியாக தமிழக போலீசாருக்கு தொப்பை அலவன்ஸ் தமிழகத்தில் அறிவிக்கப் பட்டுள்ளதால் தமிழக போலீசார் குஷியில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet