சென்னை: சமீபத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தலைமையில் ரெமோ படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீசானது. நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், உணர்ச்சிவசத்தில் கீர்த்தி சுரேஷிற்கு முன்னதாக புக் செய்த ஹீரோயின் படத்தில் நடிக்க மறுத்ததற்கு நன்றி என நய்யாண்டி செய்தார். இதுகுறித்த உங்கள் நியூஸ் புலனாய்வுக் குழு செய்த இன்வெஸ்டிகேஷனில் அவர் நய்யாண்டி செய்தது உலக்கை நாயகன் நம்ம கமல் ஹாசன் மகள் ஆஸ்கர் ஆக்டிங் ஸ்ருதி ஹாசன் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து நமது சிறப்பு நிரூபர் அவரிடம் எடுக்காத பிரத்யேகப் பேட்டியை இங்கே வழங்குகிறார். .
நிருபர்: வணக்கம் மேடம்
ஸ்ருதி: வணக்கம்
நிருபர்: உங்க கூட மூன்று படங்களில் காமெடியனா நடிச்சதுனாலத்தான் நீங்க சிவகார்த்திகேயன் கூட நடிக்க மறுத்தீங்கனு கோலிவுட்ல கொட்டாவி விடுகிறார்களே உண்மையா?
ஸ்ருதி: ஐயோ, இது அப்பட்டமான பொய்ங்க.. நிறைய பேர் அப்படி தான் நினைச்சுட்டு இருக்காங்க. சிவகார்த்திகேயன் கூட நான் சேர்ந்து இடிப்பேன்..மன்னிக்கவும் நடிப்பேன்
நிருபர்: அப்புறம் ஏன் மேடம் ரெமோல நடிக்கல?
ஸ்ருதி: : உண்மைய சொல்லணும்னா, ரெமோ படம் எங்கப்பா நடிச்ச அவ்வை சண்முகி படத்தோட காப்பி அதனால தான் இந்த படத்தை நான் தவிர்த்தேன்.
நிருபர்: அவ்வை சண்முகியே மிஸ்டர் டவுட் ஃபயர் படத்தோட காப்பிதான் என்று அனைவருக்கும் தெரியுமே.
ஸ்ருதி: : அப்படி இல்ல.. அது இங்கிலிஷ் படம் அப்போ யூடியூப் மாதிரி எல்லாம் இல்ல எங்கப்பா இன்ஸ்பயர் ஆகி அந்த படத்தை பண்ணினார்…நிருபர்: அது எப்படிங்க? உங்கப்பா பண்ணா அது இன்ஸ்பிரேஷன் மத்தவங்க பண்ணா காப்பியா?
ஸ்ருதி: : இண்டர்வியூல இப்டி தான் சொல்ல சொல்லிருக்காரு எங்க அப்பா, ஓகே வா
நிருபர்: சரி.. நீங்க பாடும் போது நல்லா இருக்கு ஆனா..பேசுறப்போ ஏங்க மேல் வாய்ஸ்ல மிமீக்ரி பண்றீங்க..
ஸ்ருதி: ஐய்யோ எனக்கு பாட்டெல்லாம் வரவே வராது.. அது பின்னணி குரல்ல எனக்கு பின்னாடி ஒரு குரல் பாடும். நான்எப்பவுமே இப்படித்தான் பேசுவேன் இது தான் என் ரியல் வாய்ஸ்..
நிருபர்: சரி உங்கள ஏங்க ஆஸ்கர் நாயகின்னு சொல்றாங்க நீங்க எப்போ ஹாலிவுட்ல நடிச்சீங்க.. ஆஸ்கர் வாங்குனீங்க…
ஸ்ருதி: நிஜமாவே உங்களுக்குத்தான் ஆஸ்கர் கொடுக்கணும்ங்க.. எல்லாரும் என்னோட ஓவர் ஆக்டிங் பார்த்துட்டு ஓட்றது கூட தெரியாம என் வாயால அத சொல்லணும்னு நல்லா நடிக்கிறீங்க அப்டீன்னு சொல்றாங்க. நீங்க.. ஐயோ. இதுக்கு மேல கேள்வி கேட்காதீங்க நான் புலி பார்ட் 2 ல நடிக்க போறேன், வர்றேன்.
நிருபர்: என்ன புலி 2வா..?
There are no comments yet
Or use one of these social networks