சென்னை: பீப் பாடலுக்காக தெருவில் இறங்கி பல போராட்டங்களை நடத்திய மகளிர் அமைப்புகள், சுவாதி கொலைக்கு வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பிருந்த நிலையில் பெண் என்ஜினீயர் சசுவாதி கொலை வழக்கில்கைதான கொலையாளி ராம்குமார் பீப் பாடல் பாடியிருந்தால் அவரை எதிர்த்திருப்போம் டி.ராஜேந்தருக்கு மகளிர் அமைப்புகள் பதிலடி கொடுத்துள்ளன.
இது குறித்து கூறப்படுவதாவது: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, கடந்த மாதம் 24ல் மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து மகளிர் அமைப்புகள் கவலைப்படவில்லை என்றும் போராட்டங்கள் நடத்தவில்லை என்றும் டி.ராஜேந்தர் நேற்று கவலைப்பட்டிருந்தார். இது குறித்து உங்கள் நியூஸ் நிருபருக்கு கற்பனையில் பேட்டியளித்த மாதர் சங்க செயலாளர் கண்ணம்மா பேட்டைகண்ணகி ‘பெண் என்ஜினீயர் சசுவாதி கொலை வழக்கில்கைதான கொலையாளி ராம்குமார் பீப் பாடல் பாடவில்லை, நாங்கள் பீப் பாடல் பாடும் திரையுலக பிரபலங்களை மட்டுமே எதிர்ப்போம். மற்ற பெண்களின், தனி உரிமை மறுப்பு, மகளிர்களின் மீதான வன்கொடுமை பற்றி எங்களுக்கு கவலையில்லை. இதில் என்ன ஒரு வருத்தம் என்றால் சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்தில் நான் இல்லாம போய் விட்டேன், நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் அங்கு ஒரு செல்பி எடுத்திருந்திருப்பேன் என்று கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks