நியூயார்க், அமெரிக்கா: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:– தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால் பெயர் தெரியாத அமெரிக்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கேப்டனுக்கு நெருக்கமான கட்சித் தொண்டரான பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது, ‘எங்கள் கட்சியின் அமெரிக்க செயலாளரை டொனால்டு ட்ரம்பை எதிர்த்து போட்டியிட கேப்டன் உத்திரவிட்டார். ஆனால் அவர் கேப்டனை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு தனது ஆதரவை ஹிலாரி கிளிண்டனுக்கு தெரிவித்து விட்டார். இதனால் அமெரிக்காவில் இருக்கும் பல கோடி தே.மு.தி.க தொண்டர்கள் இப்போது யாருக்கு ஓட்டுபோ போடுவது என்று குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் கேப்டன் இந்தியாவில் இருந்தவாறே அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட முடியுமா என்று சட்ட வல்லுனர்களின் ஆலோசனையைக் கேட்டுள்ளார் என்று கூறினார்.
There are no comments yet
Or use one of these social networks