சென்னை: சுவாதி கொலை நடந்த மறுநாளில் இருந்தே, “பிலால் மாலிக்” என்பவன்தான் கொலையாளி என்று ஒரு வந்தியை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் பரப்பினார். இதற்கு பிரபல நாடக நடிகர் எஸ்.வி. சேகரும் ஒத்து ஊதியது அனைவரும் அறிந்ததே. இதையடுத்து இவர்கள் குறிப்பிட்ட இருக்கும் பிலால் மாலிக் தற்போது சென்னை புழல் சிறையில் இருக்கிறான். இரண்டு வருடங்களுக்கு முன், இந்து முன்னணி வேள்ளையப்பன் ஜி, ஆடிட்டர் ரமேஷ்ஜி ஆகியோரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவன் என்று செய்தி வெளியானது.

இதையடுத்து, ஒய்.ஜி. மகேந்திரன், “அந்த குறிப்பிட்ட பதிவை நான் உருவாக்கவில்லை. வேறு பக்கத்தில் இருந்த பதிவை நான் பகிர்ந்தேன். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது” என்று ஜகா வாங்கினார். பிறகு எழுந்த கண்டனங்களாலும், அவரது சகலையான நடிகர் ரஜினிகாந்தின் அறிவுரையாலும் தான் வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்பு கேட்ட ஒய்.ஜி. பதிவையும் நீக்கினார்.

இது குறித்து நேற்றிரவு கப்சா நிருபர்களிடம் ஒய் ஜி மகேந்திரா – எஸ் வீ சேகர் கூட்டாக அளித்த பேட்டி பின் வருமாறு:

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற இளம்பெண்ணை கொன்ற கொலையாளி குறித்து காவல்துறை எச்சரிக்கையையும் மீறி, நாங்கள் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வதந்திகளை பரப்பி சினிமாவில் இரண்டாம் ரவுண்டு வர முயற்சி செய்தோம். அது பலன் அளிக்காமல் போய் விட்டது. சுவாதி கொலைக் குற்றவாளி ஒரு முஸ்லிம் சகோதரர் என்று பரபரப்பு தகவலை பரப்பி இளம் இயக்குனர்களிடம், “பணக்கார அப்பா, ஜட்ஜ், பாதிரியார், டாக்டர்,” போன்ற வேடங்களைக் கைப்பற்றவே ஒரு பொய்யான வாட்சப் செய்தியை தட்டி விட்டோம்.swathi

மேடை நாடகம் நடத்தி டீ செலவிற்கு கூட வழியல்லாமல் இருந்த நாங்கள் ஏதாவது ஸ்டண்ட் அடித்து சினிமா வாய்ப்பை மீண்டும் பெற்று கால் வயிற்று கஞ்சி குடிக்க நாங்கள் போட்ட திட்டத்தை காவல் துறை தனது திறமையான விசாரணையால் சுக்கு நூறாக்கி விட்டது. பொறியியல் பட்டதாரி ராம்குமார் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. “சுவாதி என்ற இந்து அப்பாவிப் பெண்ணை கொன்றது ஐ.எஸ். என்கிற இஸ்லாமிய பயங்கரவாதிகள்தான்” என்பது போன்ற வதந்திகளை பரப்பி பா ஜ க வில் சேரும் திட்டம் வைத்திருந்தேன். அதுவும் தவிடு பொடி ஆகி விட்டது. ராம் குமார் இன்னும் சிறிது காலம் பிடிபடாமல் இருந்திருந்தால் மேலும் பல பொய்யான தகவல்களை பேஸ்புக் டுவிட்டரில் பரப்பி இந்தி திரையுலகில் நுழைந்திருப்பாம். கொலை செய்ய திறமை இருந்த அளவு தப்பிப்பதில் கொலைகாரன் ராம் குமாருக்கு திறமை போதவில்லை என்று ஒப்பாரி வைத்தது பார்க்க பரிதாபமாக இருந்தது, நிருபர்கள் கண்களில் நீரை வரவழைத்தது.

பகிர்

There are no comments yet