சென்னை: சுவாதி கொலை வழக்கில் நாளுக்கு நாள் திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்க, மாதர் சங்கத்தினர் மூசு கூட விடவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. தனது மகன் சீவாத கொம்பு வை பீப் பாடல் பாடிய போது துவம்சம் செய்யாத குறையாக துன்புறுத்திய மாதர் சங்கத்தினரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று டி. ராஜேந்தர் கோரிக்கை வைத்தார். இது குறித்து அரசின் டுபாக்கூர் புலனாய்வு குழு செய்த விசாரணையில் மாதர் சங்கத்தினர் மும்பையில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

கடுமையான படப்பிடிப்பில் தனது டூப் உடல் “ரேப்” செய்யப்பட்ட பெண் போல் ஆகிவிட்டது என்ற வரலாற்று சிற்ப்பு மிக்க கருத்தை துப்பிய சல்மான் கான் நடித்த ‘சுல்தான்’ படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க அவர்கள் முண்டியடித்தனர். மாதர் சங்கத்தினர் சல்மான் கானுக்கு மிகப் பெரிய பாரட்டு விழா நடத்த உள்ள ரகசிய தகவலும் கிடைத்தது. அவர்கள் போட்ட ‘பூட்ட கேஸ்’ படத்துக்கு நல்ல பப்ளிசிட்டியை தந்து உள்ளது. இதை மோப்பம் பிடித்து சிம்புவும் அனிருத்தும் தங்களை வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடவைத்த மாதர் சங்கத்தினரை பழி வாங்கவும் இந்தி ரசிகர்களை குஷிப் படுத்தவும் ‘பீப்’ பாடலை இந்தியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். வடநாட்டு மாதர் சங்கத்தினர் புரிந்து கொள்ள ஏதுவாக ‘பீப்’ வார்த்தைக்கு இணையான இந்தி வார்த்தையை கண்டு பிடிக்க அனைத்து நூலகங்களுக்கும் சிறப்பு ரசிகர் படையை சிம்பு அனுப்பி இருப்பதாக கோடம்பக்கம் பட்சி கூறுகிறது .

பகிர்

There are no comments yet