சென்னை / புது டெல்லி : கபாலி படத்திற்காக இயக்குனர் ரஞ்சித் ஏர் ஏசியா விமானம் வரை தனது விளம்பர யுக்தியை வளர்த்து விட்டார். மேலும், மலாய் மொழியிலும் படத்தை டப் செய்து வெளியிட்டு பல கோடி கல்லாக்கட்ட திட்டமிட்டுள்ளார். இந்த புதிய இயக்குனர் ரஜினியை வைத்து இப்படி பிசினஸ் பண்றாரே, என எண்ணிய இயக்குனர் ஷங்கர் அடுத்து தான் ஹாலிவுட் படங்களிலிருந்து சுட்டு எடுத்துகிட்டு இருக்கிற எந்திரன் 2.0 படத்திற்கு என்ன மாதிரி பிசினஸ் பண்ணலாம் என யோசித்தவருக்கு, நேற்றைய தினம், நரேந்திர மோடி, தான்சானியா நாட்டில் டிரம் இசைத்த நிகழ்ச்சியை செய்தியில் பார்த்துள்ளார் உடனே ஷங்கருக்கு உதித்த அந்த வியாபார யுக்தியை நம்முடன் பகிர்ந்துக் கொண்டார், உங்களுக்காக ஷங்கரின் பிரத்யேக பேட்டி:images

நிருபர்: வணக்கம் சார், உங்கள ஹாலிவுட் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது தொந்திரவு செய்வதற்கு மன்னிக்கவும். நீங்க எந்திரன் 2.0 படத்தோட மியூசிக் டைரக்டர மாத்தப் போறதா கோலிவுட்ல பேசிக்கிறாங்களே?

ஷங்கர்: ரெம்ப ரகசியமா வெச்சிருந்த விஷயம், உங்கள் நியூஸுக்கு தெரிஞ்சிடுத்தே, முதல்ல ஏ.ஆர். ரகுமான் சார் கிட்ட சொல்லி மியூசிக் போட சொல்லிட்டேன், ஆனா, இப்போ இந்த பொடியன் ரஞ்சித் மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜியில் வானத்துக்கே போயிட்டார். அதான், நெக்ஸ்ட் நான் பண்ற 2.0 படம் இந்தியாவிலே அதிக பட்ஜெட்ல உருவாகுது. அதான், அதுக்கு எப்படி மார்கெட்டிங் பண்ணலாம்னு யோசிச்சி யோசிச்சு பார்த்தேன், ஒரு ஐடியாவும் வரல. மார்க்கெட்டிங் சினிமாவுக்கு ரொம்பவும் முக்கியமான விஷயம். ஒரு படம் நல்லா இருக்கோ இல்லியோ, வெளியில வருவதற்கு முன்னாடியே அத வித்து காசாக்கிடணும், நான் ஐ படத்துல பண்ணாமாதிரி. இதுக்கான யோசனையில இருந்தபோதுதான், நேத்து எதேச்சையா டிவியில நம்ம மோடி டிரம்ஸ் வாசிக்கிறத பார்த்தேன், இசை மேல அவருக்கு இருக்குற அளவுக் கடந்த பிரியத்தையும் அதில அவருக்கு இருக்குற தனித்துவத்தையும் பார்த்து நம்ம அப்டியே ஷாக் ஆகிட்டேன். கொஞ்சம் யோசனை பண்ணி பார்த்ததில் புது ரூட் கிடைச்சிடுச்சு… உலகம்modi-plays-drum-twitter_650x400_61468140685 பூரா 2.0 படத்தை சேல்ஸ் பண்ண இவரைத் தவிற வேற வழியில்லை, என நினைச்சேன். ரஜினியோட நண்பர் மோடிங்கறதால ரஜினி சார வச்சி மோடிய 2.0 படத்துக்கு மியூசிக் டைரக்டரா ஆக்கிட்டேன். ஏ.ஆர். ரகுமான அவருக்கு அஸிஸ்டெண்டா சேர்த்துக்கவும் ரெக்கமண்ட் பண்ணிருக்கேன். 2.0 படத்தை ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியானு 6 கண்டத்துலயும் 600 மொழிகளிலயும் பிரமாண்டமா ரிலீஸ் பண்ண முடிவு பண்ணிருக்கேன். கதை ஒண்ணும் பெரிசில்ல பட், ரஜினி இமேஜ் இமயமலையோட பெரிசு அத காசாக்கணும் அவ்ளோதான்…

There are no comments yet