சென்னை: ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வருகிற ஜுலை 22-ந் தேதி வெளியாகிறது. எந்த படத்துக்கு இல்லாத அளவுக்கு பிரம்மாண்ட அளவில் இந்த படம் வியாபாரம் ஆகியுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட ரூ.500 கோடியை தாண்டி வசூலை எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், திமுக தலைவர் கருணாநிதி கபாலி படத்திற்கும் வரி விலக்கு அளிக்கும் வரை கடற்கரையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:Karunanidhi_Reuter

உடன்பிறப்பே, தரணி போற்றும் தங்கமகன் என் அன்புத் தம்பி தமிழின் மூத்த குடிமகன் ரஜினி காந்த் நடித்த கபாலி 22ம் தேதி வெள்ளித் திரைக்கு வருகிறது. கழக முன்னோடி தம்பி ரஜினி தமிழ் மொழிக்கும் தமிழர் வளர்ச்சிக்கும் ஆற்றிய பணி ஏராளம் ஏராளம். எனக்கும் என் குடும்பத்திற்கும் அவரின் ஆதரவு என்றும் தேவைப்படுவதால் அவர் நடித்த கபாலி படத்திற்கு வரி விலக்கு அளிக்க இந்த அம்மையாரின் ஆட்சி முன் வரவில்லை. கபாலி மூன்றெழுத்து, திமுக மூன்றெழுத்து ரஜினி-யும் மூன்றெழுத்து எனவேதான் தலைக்கனம் பிடித்த தலைவி என் தம்பி ரஜினியை புறக்கணிக்கிறார். இந்த நிலை நீடிக்குமானால், நான் கபாலி படத்திற்கு வரி விலக்கு அளிக்கும் வரை கடற்கரையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். அதற்கு தண்டனையாக என்னை கபாலி படத்தை பார்க்க வைத்தாலும் எனக்கு கவலை இல்லை என்று கலைஞர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

There are no comments yet