சென்னை: உலகமெங்கும் உச்சரிக்கும் ஒரு பெயர் என்றால் அது நெருப்புடா! கபாலி தான். 500, 1000 என்ன 5000, 10000 ஒரு டிக்கெட் என்றாலும் வாங்கும் அளவிற்கு ரசிகர்களும் அவர்களை தியேட்டருக்கு இழுக்க வாங்க வைக்க படத்தை தயாரித்தவர்களும் பக்காவாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தனக்கு இதில் சிறிதும் விருப்பம் இல்லை எனவும், தாணு தான் இதற்கு காரணம் என்றும் இயக்குனர் பா. ரஞ்சித் நம்மிடம் கொடுக்காத பிரத்யேக பேட்டி இதோ…
நிருபர்: வணக்கம், ரஞ்சித் சார்.. கபாலி போஸ்டர்களில் உங்க பெயர் பா. ரஞ்சித் என உலகமெங்கும் இருக்குறத பார்க்குறப்ப உங்களுக்கு எப்படி இருக்கு..

ரஞ்சித்: மகிழ்ச்சி.. இது தலைவர் சொன்னா இன்னும் ஆப்டா இருக்கும்.. எனக்கு ரொம்ப சந்தோசமா கீதுங்க..
நிருபர்: கபாலி அப்படினா என்ன?
ரஞ்சித்: ஏழை மக்கள்.. கூலி தொழிலாளி, கேப் மாரி, மொள்ளமாரி இவங்களத்தான் கபாலின்னு சொல்வாங்க…ஆனா, கபாலி-னா அது கபாலிசுவரன் சிவன் பெயர்.
நிருபர்: உங்க முதல் படமான அட்டகத்தி மற்றும் 2வது படமான மெட்ராஸ் ரெண்டு படத்துலையும் நீங்க தலித் அரசியல மையமா வைத்து அழகான கதை பண்ணிருந்தீங்க… கபாலி எப்படி?
ரஞ்சித்: ம்ம்.. கபாலி படத்திலும் தலித் அரசியல், இருக்கு ஆனா, அது தமிழ்நாட்டு ப்ராப்ளம் இல்ல மலேசியா பிராப்ளம்.
நிருபர்: தலித் எனும் சாமனிய வெகுஜன மக்களை வச்சி நிறைய அரசியல்வாதிங்க.. ஏன் திராவிட கட்சிகள் கூட இத்தனை வருஷமா அரசியல் பண்றாங்க.. நீங்க அவங்கள வச்சி படம் பண்ண காரணம் என்ன?
ரஞ்சித்: அரசியல் கட்சிங்க இத்தனை வருஷமா அவங்கள வச்சி அரசியல் செய்து பணம் பண்ணாங்க.. இப்ப என்ன வச்சி கபாலி பண்ண சொல்லி காசு பண்றாங்க..
நிருபர்: தலித் மக்களுக்காக போராடுற போராளி படமா…கபாலிய எடுத்துட்டு அத சாதரண மக்கள் காசு கொடுத்து பார்க்க முடியாத படி விளம்பரம், பிசினஸ் பண்றீங்களே.. இது நியாயமா? ஒரு டிக்கெட் விலை இவ்ளோ வித்தா ஏழை ரசிகன் எப்படி படம் பார்ப்பான்?

ரஞ்சித்: இதே கேள்வியத்தான் நானும் தாணு சார் கிட்ட கேட்டேன்.. அதுக்கு அவரு.. நீங்க படம் மட்டும் பண்ணுங்க..பிசினஸ நாங்க பார்த்துக்குறோம்னு சொல்லிட்டாங்க.. மக்கள் பாவம்தான். இதுக்கு மேல என்னால என்ன பண்ண முடியும்.. ஆனா..ஒண்ணு சொல்றேன்.. என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரி படங்களுக்கும் இடஒதுக்கீடு முறையில் டிக்கெட் கொடுக்க வேண்டும்.
நிருபர்: அது எப்படி…
ரஞ்சித்: இப்ப, மெடிக்கல், எஞ்சினியரிங் சீட்டு எப்படி கொடுக்கிறாங்க…அது மாதிரி கபாலி படத்திற்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இலவசமாகவும், பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 40% டிஸ்கவுண்ட்லேயும், மத்தவுங்களுக்கு முழு விலையிலும் டிக்கெட் கொடுத்தால் அதுதான் சமூக நீதி…
நிருபர்: ஓ, அப்படியா…
ரஞ்சித்: ஆமா, இதை நான் உடனடியா ராமதாஸ், திருமாவளவன், அப்புறம் கருணாநிதிட்ட சொல்லி இதுக்கும் ஒரு போராட்டம் நடத்தி தாணுவை கன்வின்ஸ் பண்ணலாம்னு இருக்கேன்…ஒரு சாமனிய மனிதன் சாமானிய மனிதனுக்காக இயக்கி சாமனிய மனிதர்களின் கஷ்டத்தை போக்காமல் அவன் காசுகளையும் கொள்ளையடிக்கும் கபாலி என்ற உண்மை யாருக்கும் தெரியக்கூடாது பாருங்க….என்று தனது பிரத்யேக பேட்டியை முடித்தார் தலித் காவலர் பா. ரஞ்சித்.
There are no comments yet
Or use one of these social networks