திக்விஜய் சிங் மாதிரி என் குடும்பத்தையும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் அறிவிக்க வேண்டும் – ஜெயாவிற்கு கருணாநிதி கோரிக்கை

705

சென்னை: தன்னையும், தான் குடும்பத்தினரையும் குடும்பத்தையும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு திமுக தலைவர் மு.கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகளை தெரிவிக்கின்றன.

இது குறித்து குருணாநிதி இன்று வெளியிடாத அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது அன்னை சோனியாவின் அன்புத் தம்பியும், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங், ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் மாநில அரசின் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில், அவரும் அவரது குடும்பத்தினரும் இடம்பெற்றுள்ளதாக கூறியிருக்கிறார். அவரை போலவே நானும், எனது குடும்பத்தினரும் ஏழைகள்தான். எனது மூத்த மகன் மதுரையில் வறுமையில் வாடுகிறான். இளைய மகனோ சென்னையில் தலை நகரில் ஒரு வேலையும் இல்லாமல் தினம் சட்டமன்றம் சென்று வெளிநடப்பு செய்து என் உயிரை எடுக்கிறான். எனக்கு மகள்கள் இருந்தும் ஒரு பயனும் இல்லை. இத்தனை சொந்தம் பந்தம் இருந்தும் நான் வறுமையில் தான் வாடுகிறேன். எனவே தமிழக முதல்வரும், பிரதமர் மோடியும் கருணை கூர்ந்து திக்விஜய் சிங்அவர்களை அறிவித்தது போல் என்னையும், என் குடும்பத்தினரையும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் அறிவிக்க வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை அனைத்தையும் எங்களுக்கும் வழங்க ஆவண செய்ய வேண்டும் என மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

There are no comments yet