சென்னை: வழக்கம்போல் கவிஞர் வைரமுத்துவின் பாடல் கபாலியில் இடம்பெறவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. இயக்குனர் ரஞ்சித் தனக்கு நெருக்கமான சந்தோஷ் நாராயணனையே இதில் இசையமைப்பாளராக வைத்துக் கொண்டார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து கடந்த ஞாயிறு தன் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கபாலி ஒரு தோல்விப் படம் என்ற உண்மையை போட்டுடைத்தார். இதற்கிடையில் கவிஞர் வைரமுத்து கபாலி தோல்வி குறித்து பாடாத இரங்கற்பா இன்று வெளியாகி இருப்பதாக நமது செய்தியாளர் தெரிவிக்கிறார். உங்கள் நியூஸ் வாசகர்களுக்காக பிரத்யேகமாக இங்கே….

கள்ளிக்காட்டுக் குயிலு கதறுது
நெஞ்சு பதறுது கை கால் ஒதறுது…

காட்டுக் குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல…

கபாலிக்கு வாய்ப்புத் தர நெஞ்சமில்ல
வலிச்சு வெந்த ரணம் கொஞ்சமில்ல..

புகழ் பாட போட்ட பாட்டு கொஞ்சமில்ல
என் பணப்பெட்டிக்கு போட்ட பூட்டு வன்மமில்ல?

(கள்ளிக்காட்டுக் குயிலு கதறுது
நெஞ்சு பதறுது கை கால் ஒதறுது…)

தன் ரத்ததில் ஒரு பாதி பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா… அதை

வீணாக கட் அவுட்டில் அபிசேகம் செய்வது
ரசிகனின் மூளையப்பா…

பொங்கப்பான வெள்ளமா பாய்ஞ்சது பழைய காலமப்பா
வீங்கிப்போன உள்ளத்தில் பாய்ஞ்சது நெருஞ்சி முள்ளப்பா…

கபாலிய தாலாட்டி வளர்த்தது
தமிழ் நாட்டு மண்ணப்பா…

வைரத்த காலாட்டி மிதிச்சது
அடுத்த ஸ்டேட்டு வெண்ணப்பா..

நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரனப்பா
நட்டாதுல எறிஞ்ச வேட்டுக்காரனப்பா..

(கள்ளிக்காட்டுக் குயிலு கதறுது
நெஞ்சு பதறுது கை கால் ஒதறுது…)

ரஞ்சித் என்னும் சின்னபுள்ள
மிஞ்சிடிச்சி இந்த வைரக்கல்ல…

ஸ்டைலு ஸ்டைலுதான்
அது போச்சி பல மைலுதான்
என் நெஞ்சுக்குள்ள அடிக்குது புயலுதான்…

‘வெற்றி’ என்னும் வார்த்தை விட்டுப் போச்சி
நெற்றிப் பொட்டில் கபாலி புல்லட் தட்டிப் போச்சி..

கபாலி ஒரு செத்த எலி..
அதுக்கு கவிதையில் பாடுனேன் அஞ்சலி
கவிதையில் பாடுனேன் அஞ்சலி…

(கள்ளிக்காட்டுக் குயிலு கதறுது
நெஞ்சு பதறுது கை கால் ஒதறுது…)

இந்த இரங்கற்பாவை கேட்டுவிட்டு கபாலி ரசிகர்கள் வைரமுத்து வீட்டு எதிரே தீக்குளிக்க முடிவு செய்து, பின்னர் டீ மட்டும் குடிக்க விரைந்துள்ளதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகிர்

There are no comments yet