சென்னை: சமீபத்தில் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் அசத்தியது குறித்து அதிமுக உறுப்பினர்கள் பொறாமையில் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இன்று அவர் வெளியிடாத கேள்வி பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: என் அருமை நண்பர் தமிழவேள் பி.டி.ராஜன் பேரனும், பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் மகனுமான திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் சட்டப்பேரவையில் பேசியது குறித்து தலைக்கனம் பிடித்த தருக்கர்கள் சட்டமன்றத்தில் பேசியதை செவிமடுத்தேன். அட்ரஸ் இல்லாத கருணாஸ் என்பவர் பேசும் போது தமிழ் வளர்த்த மதுரையில் இருந்து, மதுரை மத்தியம் தொகுதி தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவரது ஆங்கில உரையை பார்த்து நானே வியந்தேன். எனக்கு ஆங்கிலம் தெரியாது. அவர் ஆங்கிலத்தில் உரையாற்றியது யாருக்கும் புரியவில்லை என்று கூறியுள்ளார்.
திமுகவில் தொண்டர்களைத் தவிர, அனைத்து திமுகவின் தலைவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆங்கிலம், ஹிந்தி, மற்றும் ஊழலில் இருந்து தப்பிக்க வைக்கும் வைக்கும் அனைத்து மொழிகளும் தெரியும் என்பது கருணாஸுக்கு தெரியாது நினைக்கிறேன். திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஹிந்தியில் மட்டுமே பேசுவதாக என்னிடம் தெரிவித்தார் நான் தான் தமிழ் நாட்டின் நலன் கருதி அவரை ஆங்கிலத்தில் பேசுமாறு கூறி தமிழ் மொழியையும் தமிழர்களையும் காப்பற்றினேன். கருணாஸ் போன்றவர்களுக்கு அண்ணா அறிவாலயத்தில் இலவச ஹிந்தி வகுப்புக்களை நடத்துகிறோம், ஆனால் அதற்க்கு திமுகவில் குறைந்த பட்சம் எம்.எல்.ஏ, எம்.பி அல்லது எங்களது குடும்ப நிறுவனங்களில் பணிபுரிவராகவோ இருக்க வேண்டும். அந்த தகுதியை எலிப் படை தலைவர் கருணாஸ் இழந்து விட்டார். என்று அந்தக் கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
There are no comments yet
Or use one of these social networks