சென்னை: கலைப்’புளி’ எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. கபாலி பட டிக்கெட்டுகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிடவும் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது குறித்து அப்பட இயக்குநர் பா. இரஞ்சித், இன்று உங்கள் நியூஸ் நிருபருக்கு அளித்த கற்பனை பேட்டியில் கூறியதாவது:
முதல் நாளன்று ரஜினி ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்காதது பெரிய விஷயமா இல்ல. எங்க காசு இருக்குதோ அங்கதான் டிக்கெட் இருக்கும். காசி திரையரங்கில் நான் படம் பார்த்தபோது, என்னடா இவ்வளவு கேவலமா படம் எடுத்திருக்கோமேன்னு எனக்கே கஷ்டமாக இருந்தது, இருந்தாலும் என்ன பண்றதுன்னு உள்ளேயே உக்காந்திருந்தேன். ரசிகர்ளும் பொது மக்களும் என்னிடம் இப்படி பண்ணீட்டிங்களே என்று கேட்டார்கள்.
டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதை அனைவரும் அறிவர். படம் தயாரிக்க பத்துக்கோடி, ஆனா விளம்பரத்திற்கு நூறு கோடி செலவு. இதெல்லாம் யார் கொடுப்பார்கள்இ. சில தியேட்டர்களில் டிக்கெட்டை குறைந்த விலையில் விற்றுள்ளனர். இதில் எனக்கு ஒரு சதவிகித உடன்பாடும் இல்லை. எனக்கு பவர் இருந்திருந்தால் இதை நான் தடுத்திருப்பேன் படம் பிடிக்கவில்லை என்று யாரேனும் சொன்னால் அவர்களுக்கு பணத்தை திருப்பித்தர தியேட்டர்காரர்களிடம் முறையீடு செய்யாலாம் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks