சென்னை: ரஜினி நடித்த கபாலி படம் நாடு முழுவதும் ரசிகர்களின் பட்டாசு, மேல தாளம், தாரை தப்பட்டை போன்ற சத்தத்துடன் கோலாகல வரவேற்புடன் கடந்த வாரம் வெளியானது. நாடு முழுவதும் கபாலியை கொண்டாடி வரும் நிலையில், ரஜினியின் தீவிர ரசிகர்கள் கபாலி படம்ஓட வேண்டும் என்பதற்காக மதுரை மணி இம்போலோ மல்டிப்ளக்ஸ் தியேட்டர் முன்பு அமர்ந்து மண் சோறு சாப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. RAJINI
 
இந்நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிடாத அறிக்கையில் கூறியுள்ளதாவது: கபாலி படம் தியேட்டரை விட்டு ஓட வேண்டும் என சிலர் மண் சோறு சாப்பிட்டுள்ளதாக அறிந்தேன். தீச்சட்டி எடுப்பது,  தீக்குளிப்பது, தற்கொலை செய்து கொள்வது, அங்கப்பிரதட்சணம், மண்சோறு, பால்குடம் எடுத்தல், யாகம் வளர்த்தல் அனைத்தும் என் கவனத்தை கவருவற்காக எனது அடிமைகள் அவ்வப்போது செய்யும் விளம்பர யுக்திகள். இவை அனைத்திற்கும் அ.தி.மு.க. தலைமை செயலகம் காப்புரிமை பெற்றுள்ளது. வேறு யாரும் இவற்றை பயன்படுத்தி விளம்பரம் தேட முடியாது. எனவே மதுரையில்  கபாலிக்காக மண் சோறு சாப்பிட்டவர்கள் நிச்சயமாக அ.தி.மு.க.-வினராகவே இருக்கமுடியும். அவர்கள் மீது விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   

There are no comments yet