சென்னை: தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 29 பேருடன் மாயமான விமானத்தை தேடும் பணியில் அமெரிக்காவின் உதவியை நாட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கேப்டன் டிவியில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் – புலன்விசாரணை படங்களை பேக் டு பேக் பார்த்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மெய்சிலிர்த்து போய் உள்ளார்.
உடனே கேப்டன் விஜயகாந்தை தொடர்பு கொண்டு, “அமெரிக்க படையுடன் இணைந்து விமானத்தை கண்டுபிடிக்க உதவுங்கள் எசமான்” என்று கண்ணீர் வடித்ததாக கூறப்படுகிறது. சரிந்து போன தனது அரசியல் செல்வாக்கை தூக்கி நிறுத்தவும், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலையும் கருத்தில் கொண்ட விஜயகாந்த் உடனடியாக சம்மதம் தெரிவித்தார். சினிமாக் கம்பெனிகளுக்கு போன் செய்து தனது பழைய மிலிட்டரி யூனிபார்ம், ரெயின் கோட் முதலிய கந்தல் கிழிசல் துணிகளை வாங்கி பிரேமலதாவிடம் கொடுத்துள்ளார்.
பழைய தையல் மிஷினுக்கு விளக்கெண்ணை விட்டு ஒட்டு தைத்த பிரேமலதா, முன்பு தேர்தல் சமயத்தில் கூறிய டயலாக்கை நினைவு கூர்ந்த்து ” “போலீஸ்காரர்களுக்கு துணிச்சல் என்பதே விஜயகாந்த் நடித்த போலீஸ் படங்களைப் பார்த்துத் தான் வரும்..” என்று கர்ஜித்தார். இதை தொடர்ந்த்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அளிக்காத பேட்டியில் கூறி இருப்பதாவது: “ஒவ்வொரு முறை தீவிரவாதிகள் பிரச்சினை வரும் போதும் தன் டுபாக்கூர் சினிமாக்களில் நமக்கு நாட்டை மீட்டு கொடுத்தவர் கேப்டன். அமெரிக்க படையில் விஜயகாந்த் கமாண்டோ பயிற்சி பெற்று நமக்கு விமானத்தை கண்டு பிடித்த தருவார் என்று நம்புகிறோம். மேலும் விமானம் மாயாமானதற்கு நாசவேலை காரணாமாக இருக்க முடியாது, ஏனெனில் கமிஷன் வாங்கி கொள்முதல் செய்த தரக் குறைவான, பராமரிப்பு இன்றி காயாலான் கடைக்கு போட இருந்த விமானத்தை எங்கள் பைலட் ஓட்டிச் சென்றதால் இவ்வாறு நேர்ந்து விட்டது. இதே போன்ற பழுதுள்ளா விமானங்கள் இன்னும் பல வாங்குவதற்காக பிரதமர் மோடி அடுத்த வாரம் 8 நாடுகளுக்கு பயணம் செய்ய இருக்கிறார் என்று வருத்தத்துடன் தெரிவித்தார்
There are no comments yet
Or use one of these social networks