டெல்லி / சென்னை: டெல்லி மேல்–சபை தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, டெல்லியில் இருந்து சென்னை வருவதற்காக நேற்று பிற்பகல் 2.45 மணி அளவில் விமான நிலையத்துக்கு சென்றார். விமானத்தில் ஏறுவதற்கான வழக்கமான நடைமுறைகள் முடிந்த பின்னர், அவர் திடீரென்று தனது சென்னை பயணத்தை ரத்து செய்து விட்டு வெளியே வந்தார். அப்போது, சென்னை வருவதற்காக விமான நிலையத்துக்கு வந்த அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா, எதிரே வந்த திருச்சி சிவாவை பார்த்தும், பாய்ந்து சென்று அவரது சட்டையை பிடித்தார். பிறகு நடந்ததை இங்கே விவரிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த களேபரத்தில் திருச்சி சிவா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி அறுந்து கீழே விழுந்தது.siva sasikala

இந்த சம்பவம் பற்றி பின்னர் திருச்சி சிவாவும் சசிகலா புஷ்பாவும் கூட்டாக நமது கப்ஸா நிருபருக்கு பேட்டி அளித்தனர்:

சசிகலா புஷ்பா: ஏர்போர்ட்டுக்கு உள்ள வந்துட்டு இருந்தனா, திடீர்னு இவரை பார்த்துட்டேன், எனக்கு கையும் ஊடலை, காலும் ஓடல, பழைய நினைவெல்லாம் வந்து விட்டது. ஏர்போர்ட்டுன்னு பாக்காம பாய்ந்து ஓடிப்போய் பிடிக்கப்போனேன். ஆள் எட்டிப்போனதால், கோவத்துல நாலு விட்டேன் கன்னத்துல.

திருச்சி சிவா: இந்தம்மா போர பிளைட்டுல போக வேண்டான்னுதான் ஏர்போர்ட்டை விட்டு ஒளிஞ்சு ஒளிஞ்சு வெளிய வந்தேன், ஆனாலும் விதி வலியது அல்லவா, அதான் மாட்டிகிட்டேன்.

பின்னர் இருவரும் கோரஸாக ‘எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் சார், குடும்பம், குட்டி, வீடு, காடு, ஏர்போர்ட்டு எங்களை கண்டுக்காதிங்க. எங்களை வெச்சிருக்கிற கட்சிகளையும் கண்டுக்காதிங்க. மானம், வெட்கம் எல்லாம் எங்களுக்கும் கிடையாது, எங்க கட்சித் தலைமைக்கும் கிடையாது’ என்றனர்.

There are no comments yet